செய்திகள் மலேசியா
தர்ம மடானி திட்டம்; சமூக ஒற்றுமைக்கும் எதிர்கால நலனுக்கும் குணராஜ் முன்வைத்த அறைகூவலுக்கு மாமன்றம் ஆதரவு
கோலாலம்பூர்:
மடானி அரசாங்கம் 1,000 இந்து ஆலயங்களுக்கு தலா 20,000 வெள்ளி வீதம், மொத்தமாக 2 கோடி வெள்ளியை நிதியாக ஒதுக்கீடு செய்துள்ள தர்ம மடானி திட்டத்திற்கு மாமன்றம் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தேசியத் தலைவத் ரிஷிகுமார் வடிவேலு இதனை கூறினார்.
இந்து சமய வழிபாட்டுத் தலங்கள் வெறும் பிரார்த்தனை இடங்களாக மட்டும் இருந்துவிடாமல், சமுதாயத்தின் கல்வி, கலாச்சாரம், சமூக நலன் மற்றும் ஆன்மிக வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தும் மையங்களாகப் பரிணமிக்க வேண்டும் எனும் இலட்சிய நோக்கத்திற்கு இசைவாக அமைந்துள்ள இந்த நிதியுதவி, மலேசிய இந்து சமூகத்திற்கு ஒரு புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளித்துள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை படிப்படியாக மேம்படுத்தி, அனைத்து இன மக்களும் சமமாகப் பயன்பெறும் வகையில் திட்டங்களை வகுத்து வரும் இத்தருணத்தில், இந்து சமய மறுமலர்ச்சிக்கென 20 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளிக்கிறது.
இந்த நிதி வெறும் ஆலயக் கட்டுமானங்கள் அல்லது பராமரிப்புக்கு மட்டும் பயன்படாது.
மாறாக, இந்து சமூகத்தின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும் வகையில், கல்வி சார்ந்த திட்டங்கள், சமூக நலன் சார்ந்த முயற்சிகள், கலாச்சாரப் பாதுகாப்புக் கூறுகள் மற்றும் வளர்ச்சி மைய நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படலாம் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் கூறியதை மாமன்றம் ஆதரிகின்றது.
இந்த நிதியை மேலும் பலனளிக்கச் செய்ய 20,000 வெள்ளியைப் பெறும் ஒவ்வொரு ஆலயமும், அதில் பத்தில் ஒரு பங்கான 2,000 வெள்ளியை பொதுவான சமூக நலன் கருதி கொடையாக வழங்க முன்வந்தால், ஆயிரம் ஆலயங்களும் இணைந்து 2 மில்லியன் வெள்ளி மதிப்பிலான ஒரு கூட்டு நிதியைத் திரட்ட முடியும்.
இந்த கூட்டு நிதி, பல்வேறு சமூக நலத்திட்டங்கள், கல்வி உதவித் திட்டங்கள் மற்றும் அறக்கட்டளைகள் மூலம் மலேசிய இந்து சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு நிலையான நன்மைகளை வழங்கும் எனும் டாக்டர் குணராஜ் முன்வைத்த தொலைநோக்குப் பார்வையை மாமன்றம் பெரிதும் வரவேற்கின்றது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 4, 2025, 3:21 pm
அமெரிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு அரசாங்கம் ஏஜிசியுடன் கலந்தாலோசித்தது: பிரதமர்
November 4, 2025, 3:20 pm
எம்ஏசிசியின் நடவடிக்கையை எதிர்த்து வழக்குத் தொடர இல்ஹாம் கோபுர நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி
November 4, 2025, 3:18 pm
கைரி விவகாரம் குறித்து அம்னோ விவாதிக்கவில்லை; ஆனால் ஊடக அறிக்கைகளுடன் நான் முரண்படவில்லை: ஜாஹித்
November 4, 2025, 3:17 pm
பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 கார்கள் சேதமடைந்தன
November 4, 2025, 11:30 am
நாளைக்கு நீ சாகணும்னு நான் ஆசைப்படுறேன்
November 4, 2025, 9:54 am
பள்ளி கழிப்பறையில் மாணவர் மரணம்; முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்: கல்வியமைச்சு
November 4, 2025, 8:00 am
டபள்யூசிஇ திட்டம்: 19 நில உரிமையாளர்கள் இடத்தை காலி செய்ய 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
November 4, 2025, 7:52 am
