நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு அரசாங்கம் ஏஜிசியுடன் கலந்தாலோசித்தது: பிரதமர்

கோலாலம்பூர்:

அமெரிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு அரசாங்கம் ஏஜிசியுடன் கலந்தாலோசித்தது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

அமெரிக்காவுடனான பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் அரசியலமைப்பிற்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக, அது குறித்து அட்டர்னி ஜெனரலின் (ஏஜிசி) கருத்துக்களைப் பெற அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.

கூட்டரசு அரசியலமைப்பு, உள்நாட்டு சட்டங்களின் உணர்வுக்கு முரணான எந்தவொரு விதிகளும் ஒப்பந்தத்தில் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக ஏஜிசியின் கருத்துக்கள் கோரப்பட்டது.

ஒப்பந்தத்தை விரிவாக ஆராய்ந்த பிறகு, ஏஜிசி சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. எனவே இந்த அறிக்கை அரசியல் நோக்கம் கொண்டது என்று கூறாதீர்கள் ன்று அவர் மக்களவையில் கூறினார்.

ஒப்பந்தம் குறித்த ஏஜிசியின் கருத்துக்களை அரசாங்கம் அமைச்சரவையில் முன்வைக்குமா என்று கேட்ட கோத்தாபாரு நாடாளுமன்ற உறுப்பினர் தக்கியுதீன் ஹசானின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset