செய்திகள் மலேசியா
மலேசியா, அமெரிக்க ஒப்பந்தம் தேசிய கண்ணியத்தை பாதிக்கிறது என்ற கூற்றுகள் முற்றிலும் அரசியல் சார்ந்தவை: பிரதமர்
கியோங்ஜு:
மலேசியா, அமெரிக்க ஒப்பந்தம் தேசிய கண்ணியத்தை பாதிக்கிறது. நாட்டிற்கு தீங்கு விளைவிக்கிறது என்ற கூற்றுகள் முற்றிலும் அரசியல் சார்ந்தவை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் சமரசங்கள் இருக்க வேண்டும்.
குறிப்பாக அது பெரிய உறவுகள், முதலீடுகளை உள்ளடக்கியதாக இருக்கும்போது இது அவசியம்.
இருப்பினும், மலேசியா இன்னும் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளித்து கண்ணியத்தைப் பேணுகிறது.
முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஸப்ருல் அப்துல் அஜீஸ் நாடாளுமன்றத்தில் ஒப்பந்தம் குறித்து நீண்ட, தெளிவான விளக்கத்தை அளித்ததாக பிரதமர் கூறினார்.
எனவே ஒப்பந்தத்தில் உள்ள ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளை நாம் மறுக்க விரும்பினாலும், சில கட்சிகள் மறுத்தாலும், நாங்கள் விளக்க வேண்டிய அவசியமில்லை.
ஏனென்றால் தெங்கு ஸப்ருல் நாடாளுமன்றத்தில் பலமுறை இதை நன்றாக விளக்கியுள்ளார்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து அதை அரசியலாக்க நினைக்கிறார்கள்.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு தலைவர்கள் கூட்டத்தின் முதல் நாள் முடிந்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 1, 2025, 4:21 pm
வேப் தடை எப்போது செயல்படுத்தப்படும்? ஏன் இந்த தாமதம்?
November 1, 2025, 1:40 pm
சேவைகளை தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராட அதிகாரிகளுடன் கூரியர் துறை ஒத்துழைக்க வேண்டும்: ஃபஹ்மி
November 1, 2025, 1:15 pm
கம்போடியாவில் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 7 மலேசியர்களை போலிஸ் தேடுகிறது
November 1, 2025, 1:11 pm
கேஎல்சிசி 3ஆவது டவரில் தீ: சொகுசு உணவகப் பகுதியின் 30 சதவீதம் எரிந்தது
November 1, 2025, 12:59 pm
அமைச்சர்கள் விவேகத்துடன் பதிலளிக்க வேண்டும்: ஃபஹ்மி
November 1, 2025, 12:35 pm
நான் ராஜினாமா செய்த பிறகு அம்னோ பிளவுபட்டது: துன் மகாதீர்
November 1, 2025, 12:30 pm
மலேசியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை சட்ட ரீதியில் சவால் செய்ய உரிமை கட்சி பரிசீலித்து வருகிறது: இராமசாமி
November 1, 2025, 12:08 pm
