நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போடியாவில் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 7 மலேசியர்களை போலிஸ் தேடுகிறது

கோலாலம்பூர்:

கம்போடிய அதிகாரிகளால் தேடப்படும் 130 மில்லியன் ரிங்கிட் இணைய மோசடி வழக்கு தொடர்பாக ஏழு மலேசியர்கள் இப்போது போலிஸ் படையின் தேடப்படும் பட்டியலில் உள்ளனர்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ எம். குமார் இதனை தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களையும் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.

ஏழு மலேசிய சந்தேக நபர்களும் கைது, மேலதிக விசாரணைக்காக தேடப்படும் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு, வெளிநாட்டு சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் கண்டறிதல் முயற்சிகளை தீவிரப்படுத்த போலிஸ்படை உறுதி கொண்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எல்லை தாண்டிய குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு அனைத்துலக ஒத்துழைப்பை வலுப்படுத்த போலிஸ் உறுதியாக உள்ளது என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

முன்னதாக, கம்போடியாவை தளமாகக் கொண்ட 27 சிங்கப்பூரர்களும் ஏழு மலேசியர்களும் 130 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சைபர் கிரைம் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாக சிங்கப்பூர் போலிஸ் படை வெளிப்படுத்தியதாக  செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset