செய்திகள் மலேசியா
வேப் தடை எப்போது செயல்படுத்தப்படும்? ஏன் இந்த தாமதம்?
பினாங்கு:
பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இதுவரை வேப்பை தடை செய்யாத மாநிலங்களின் முழுமையான தடை அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறது. என்கிறார் அச்சங்கத்தின் கல்வி, புகை பிடித்தல் பிரச்சாரத்திற்குரிய அதிகாரி என்.வி.சுப்பாராவ்.
பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் சமீபத்திய பிரச்சாரத்தின் போது பினாங்கு, பேராக்கில் உள்ள பள்ளி மாணவர்களிடையே வேப், இ-சிகரெட் பயன்பாடு இன்னும் பரவலாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.
முன்பு, தேசிய வகை பள்ளிகளில் வேப் பிரச்சனை அதிகமாக இருந்தது.
ஆனால், இப்போது அது பிற மொழி தொடக்கப் பள்ளிகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது என்றார் அவர்.
எனவே, தடை செய்யப்படாத மாநிலங்களில் வேப் தடை எப்போது அமல்படுத்தப்படும் என்பதை அறிய விரும்புகிறது பி.ப.சங்கம்.
பல பெற்றோர்களும் ஆசிரியர்களும் வேப்பை தடை செய்யாத மாநிலங்களான பினாங்கு, பேராக், நெகிரி செம்பிலான் கூட்டரசு பிரதேசம், மலாக்கா, சபா, சரவாக் ஆகியவை தடையை அறிவிப்பதற்காக பலர் காத்திருக்கிறார்கள்.
இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன என்பது எங்களுக்குப் புரியவில்லை.
இது மிகவும் முக்கியமான சுகாதாரப் பிரச்சினை.
வேப்பால் ஏற்படும் நோய்களுக்கு அரசாங்கம் மில்லியன் கணக்கில் செலவிட வேண்டியிருக்கும்.
துணை சுகாதார அமைச்சர் லுகானிஸ்மான் அவாங் சௌனி கூறியிருந்தபடி
சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இ-வாலி போன்ற இ-சிகரெட்டுகளுடன் தொடர்புடைய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மதிப்பிடப்பட்ட செலவு ஏற்கனவே மவெ 244.8 மில்லியனை எட்டியுள்ளது என்றார்.
இ-வாலி என்பது இ-சிகரெட் அல்லது வேப் புகைத்தால் எற்படும் நுரையீரல் நோய்.
இந்த ஆரோக்கியமற்ற நடைமுறைகளுக்கு அதிக பணம் செலவிடப்பட வேண்டுமா?
ஜோகூர், கிளந்தான், தெரெங்கானு, பெர்லிஸ், கெடா, பகாங் ஆகிய மாநிலங்களில் ஆரம்ப தடையை அமல்படுத்தியுள்ளன. இதில் மின்னணு சிகரெட் விற்பனை உரிமங்களை வழங்கவோ அல்லது புதுப்பிக்கவோ கூடாது என்ற முடிவும் அடங்கும்.
எனவே வேப்பிங் விற்பனையை இன்னும் தடை செய்யாத மாநிலங்கள், மாணவர்கள் உட்பட நமது இளம் தலைமுறையினரின் நலனுக்காக, மேலும் தாமதமின்றி உடனடியாக தடையை அறிவிக்குமாறு பி.ப.சங்கம் வலியுறுத்துகிறது.
எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியம் தனிப்பட்ட செல்வத்தை விட முக்கியமானது என்றார் என்.வி.சுப்பாராவ்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
November 1, 2025, 1:40 pm
சேவைகளை தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராட அதிகாரிகளுடன் கூரியர் துறை ஒத்துழைக்க வேண்டும்: ஃபஹ்மி
November 1, 2025, 1:15 pm
கம்போடியாவில் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 7 மலேசியர்களை போலிஸ் தேடுகிறது
November 1, 2025, 1:11 pm
கேஎல்சிசி 3ஆவது டவரில் தீ: சொகுசு உணவகப் பகுதியின் 30 சதவீதம் எரிந்தது
November 1, 2025, 12:59 pm
அமைச்சர்கள் விவேகத்துடன் பதிலளிக்க வேண்டும்: ஃபஹ்மி
November 1, 2025, 12:35 pm
நான் ராஜினாமா செய்த பிறகு அம்னோ பிளவுபட்டது: துன் மகாதீர்
November 1, 2025, 12:30 pm
மலேசியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை சட்ட ரீதியில் சவால் செய்ய உரிமை கட்சி பரிசீலித்து வருகிறது: இராமசாமி
November 1, 2025, 12:08 pm
