நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை சட்ட ரீதியில் சவால் செய்ய உரிமை கட்சி பரிசீலித்து வருகிறது: இராமசாமி

கோலாலம்பூர்:

புதிதாக கையெழுத்திடப்பட்ட அமெரிக்க, மலேசியா பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தை நியாயமற்றது, ஒருதலைப்பட்சமானது என்பது குறித்து ஆராயப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அதை சவால் செய்வதற்கான சட்ட வழிகளை உரிமை கட்சி ஆராய்ந்து வருகிறது.

இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதற்கான காரணங்கள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க கட்சி அதன் சட்டக் குழுவுடன் கலந்தாலோசித்து வருவதாக உரிமை கட்சியின் தலைவர் பி. ராமசாமி ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

நாட்டின் இறையாண்மை, பொருளாதார சுதந்திரத்தில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தும் பாதகமான தாக்கங்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்ட ஒரு மலேசியராக, இந்த ஒப்பந்தத்தை சவால் செய்யவோ அல்லது ரத்து செய்யவோ மலேசிய நீதிமன்றங்களில் நீதித்துறை மறுஆய்வை நாடுவதற்கு காரணங்கள் இருக்கலாம் என்று உரிமை கட்சி நம்புகிறது.

இந்த ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாக அதிகாரத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது.

அமெரிக்காவில் சட்ட சவால்களையும் எதிர்கொள்ளக்கூடும்.

மேலும் மலேசியா ஒப்பந்தத்தில் இருந்து விலகும் உரிமையைத் தக்க வைத்துக் கொண்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பகிரங்கமாகக் கூறினார்.

இது சட்ட, அரசியலமைப்பு நடவடிக்கைக்கான சாத்தியத்தை எடுத்துக்காட்டுகிறது என்று ராமசாமி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset