நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேஎல்சிசி 3ஆவது டவரில் தீ: சொகுசு உணவகப் பகுதியின் 30 சதவீதம் எரிந்தது

கோலாலம்பூர்:

கேஎல்சிசி 3ஆவது டவரில் ஏற்பட்ட தீ விபத்தில்  சொகுசு உணவகப் பகுதியின் 30 சதவீதம் எரிந்தது.

செந்தூல் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தலைவர் முஹம்மது ஹபிசான் ஹான் இதனை கூறினார்.

இங்குள்ள கேஎல்சிசி 3ஆவது டவரில் தீ இன்று  தீ விபத்து ஏற்பட்டது.

இதில் கட்டிடத்தின் 57ஆவது மாடியில் உள்ள ஒரு சொகுசு உணவகத்தின் சுமார் 30 சதவீத இடம் எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் குறித்து தனது துறைக்கு காலை 6.41 மணிக்கு அவசர அழைப்பு வந்தது.

கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்பு நடவடிக்கைகள் குழு,  துன் ரசாக், ஹாங் துவா படையில் இருந்து 35 அதிகாரிகள்,  பணியாளர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பியது.

தீ காலை 7.04 மணிக்கு வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது காலை 8.45 மணிக்கு முழுமையாக அணைக்கப்பட்டது.

இங்குள்ள மெனாரா 3, கேஎல்சிசி வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset