நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோன் 95 பெட்ரோலின் கேள்விக்குரிய அளவு, தரம் குறித்த குற்றச்சாட்டுகளை உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு விசாரிக்கிறது

புத்ராஜெயா:

ரோன் 95 பெட்ரோலின் கேள்விக்குரிய அளவு, தரம் குறித்த குற்றச்சாட்டுகளை உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு விசாரிக்கிறது.

அமைச்சின் அமலாக்க இயக்குநர் ஜெனரல் டத்தோ அஸ்மான் ஆடம் இதனை தெரிவித்தார்.

பூடி மடானி ரோன் 95 இலக்கிடப்பட்ட மானியம் செயல்படுத்தப்பட்ட பிறகு பல குற்றச்சாட்டுகள் எழுகிறது.

குறிப்பாக வாடிக்கையாளர்கல் சந்தேகத்திற்குரிய அளவு, தரம் கொண்ட எரிபொருளைப் பெறுவதாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளை தீவிரமாகக் கருதுவதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இக்குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹம்மத் அலி, இந்தப் பிரச்சினையை வெளிப்படையாக விசாரிக்க முடியும் என்பதை உறுதிசெய்ய உடனடி, விரிவான நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்.

வாடிக்கையாளர்கள்  உரிமைகள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் இந்த விவகாரம் வெளிப்படையாக விசாரிக்கப்படுவதை உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset