நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சேவைகளை தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராட அதிகாரிகளுடன் கூரியர் துறை ஒத்துழைக்க வேண்டும்: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

சேவைகளை தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராட  அதிகாரிகளுடன் கூரியர் துறை ஒத்துழைக்க வேண்டும்.

தகவல் தொடர்பு அமைச்சர்  ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்கு டெலிவரி சேவைகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.

இதற்கான கூரியர் துறை போலிசார், சுங்கத்துறையுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்.

கடந்த ஆண்டு மில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்த கூரியர் சேவைகளை தவறாகப் பயன்படுத்தியதாக பல வழக்குகள் எழுந்ததைத் தொடர்ந்து, தொழில்துறையின் பாதுகாப்பு தொடர்ந்து முன்னுரிமையாக உள்ளது.

கடந்த ஜூலை மாதம் சரவா சுங்கத் துறை 7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 42 கிலோவிற்கும் அதிகமான எக்ஸ்டசி மாத்திரைகளைக் கைப்பற்றியது.

இதன் மூலம் தீபகற்பத்திலிருந்து கூரியர் துறைகளை பயன்படுத்தியதாகக் கூறப்படும் இந்த கும்பல், சரவாக்கில் 8.53 மில்லியன்  ரிங்கிட் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அவர் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset