நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மைத்துனரால் தலை துண்டிக்கப்படும்வரை வெட்டப்பட்ட ஆடவர் உயிரிழந்தார்

ஜெர்லுன்:

மைத்துனரால் தலை துண்டிக்கப்படும் வரை வெட்டப்பட்ட ஆடவர் உயிரிழந்தார்.

குபாங் பாசு மாவட்ட போலிஸ் தலைவர் முஹம்மத் ரட்ஸி அப்துல் ரஹிம் இதனைக் கூறினார்.

இன்று கம்போங் பிடா 3 இல் உள்ள ஒரு நெல் வயலில் சண்டை நடந்தது.

இந்த சண்டையின் போது மைத்துனரால் தலை துண்டிக்கப்பட்டதால் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று இரவு 7.05 மணிக்கு ஒரு மூர்க்கத்தனமான சண்டை நடந்ததாக பொதுமக்களிடமிருந்து தனது துறைக்கு அழைப்பு வந்தது.

சந்தேக நபரின் வீட்டிலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு நெல் வயலில் ஒரு ஆணின் உடல் கிடந்ததாகக் கண்டெடுக்கப்பட்டது.

சந்தேக நபரை கத்தியுடன் சரணடையச் செய்ய போலிசார் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து இரவு 8 மணியளவில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்கு உதவுவதற்காக 30 சென்டிமீட்டர் நீளமுள்ள ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது என்று  சம்பவம் நடந்த இடத்தில் சந்தித்தபோது அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset