நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3,350 தேர்வு மையங்களில் 413,372 மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வை எழுதுவார்கள்: கல்வியமைச்சு

புத்ராஜெயா:

நாட்டில் 3,350 தேர்வு மையங்களில் 413,372 மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வை எழுதுவார்கள்.

கல்வியமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

வரும் நவம்பர் 3 முதல் டிசம்பர் 23 வரை நாடு முழுவதும் 2025ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வுகள் நடைபெறவுள்ளது.

கிட்டத்தட்ட 3,350 தேர்வு மையங்களில்  இந்த தேர்வு நடைபெறும்.

இந்த தேர்வை எழுத மொத்தம் 413,372 வேட்பாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

தேர்வை சீராக நிர்வகிப்பதையும் நடத்துவதையும் உறுதி செய்வதற்காக மொத்தம் 127,526 தேர்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு கூறியது.

தேர்வுத் தாளின் தேதி, நேரம், தாள் குறியீடு மற்றும் பெயர் பற்றிய தகவல்களையும், தேர்வு முழுவதும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் பெற தேர்வு கால அட்டவணையைப் பார்க்க நினைவூட்டப்படுகிறது.

SPM 2025 தேர்வு கால அட்டவணையை தேர்வு வாரியத்தின் (அதிகாரப்பூர்வ போர்ட்டலில் இருந்து http://lp.moe.gov.my  என்ற இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும் தேர்வர்கள் தங்கள் அடையாள ஆவணங்கள் மற்றும் தேர்வுப் பதிவு அறிக்கையை தேர்வு மையத்திற்கு கொண்டு வர நினைவூட்டப்படுகிறார்கள் என கல்வியமைச்சு கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset