நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாங்கி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான திடலை விட்டுக் கொடுக்க மாட்டோம்; திடலை காக்க தொடர்ந்து போராடுவோம்: டத்தோ டி. மோகன்

பாங்கி:

பாங்கி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான திடலை விட்டுக் கொடுக்க மாட்டோம். திடலை காக்க தொடர்ந்து போராடுவோம்.

மஇகாவின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோ டி. மோகன் இதனை கூறினார்.

முன்பு பாங்கி லாமா புரூக் தோட்டம் என அழைக்கப்பட்ட இடத்தில் பாங்கி தமிழ்ப்பள்ளி அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட தமிழ்ப்பள்ளியாக இது விளங்குகிறது.

ஆனால் இப்பள்ளிக்கு என சொந்தமாக திடல் இல்லை. பள்ளிக்கு அருகே உள்ள தோட்ட திடலை தான் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

திடல் அமைந்துள்ள நிலம் தனியார் மேம்பாட்டு நிறுவனத்திற்கு செந்தமானது என்பதால் அதை பெற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அம்முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையை அத் திடலை மூடுவதற்கான நடவடிக்கை சம்பந்தப்பட்ட நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

அத்திடலை பாதுக்காக்க வேண்டும். தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என இன்று அமைதி போராட்டம் ஒன்று நடைபெற்றது.

தோட்டத்தின் முன்னாள் மக்கள், பெற்றோர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் நானுன் கலந்து கொண்டேன். குறிப்பாக அவர்களின் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவை வழங்கியுள்ளேன்.

காரணம் இந்த நாட்டில் நம் சமூதாயம் தொடங்கிதமிழ்ப்பள்ளி, ஆலயத்திற்கு எதுவும் எளிதாக கிடைத்து விடாது. போராடினால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும்.

அவ்வகையில் பாங்கி தமிழ்ப்பள்ளியின் திடலை பாதுக்காக்க நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று டத்தோ டி. மோகன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset