நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்கா சீனா இடையேயான நெருக்கமான உறவுகள் மலேசியாவை பொருளாதாரக் கூட்டணிக்கு இடையேயான இணைப்பாக மாற்றுகின்றன: பிரதமர்

கியோங்ஜு:

அமெரிக்கா, சீனாவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணுகின்ற மலேசியாவின் சமநிலையான அணுகுமுறை, பிராந்தியத்தில் உள்ள பல்வேறு பொருளாதார முகாம்களை இணைக்கும் பாலமாக நாட்டை வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

ஆசியான், ஆசிய, பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபெக்) போன்ற தளங்கள் மூலம் பிராந்திய ஒத்துழைப்பை மையமாகக் கொண்ட இந்த நடவடிக்கை, பெருகிய முறையில் துண்டு துண்டான, நிச்சயமற்ற உலகளாவிய வர்த்தக சூழலுக்குப் பொருத்தமானதாகக் கருதப்படுகிறது.

முன்னதாக, இன்றிரவு ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்துடன் இணைந்து ஒரு பணிப் பயணத்திற்காக வந்திருந்த டத்தோஸ்ரீ அன்வார், 

அபெக் மலேசியா தலைவர் ரூபன் எமிர் ஞானலிங்கத்திடமிருந்து அபெக் வணிக ஆலோசனைக் குழு ஆண்டு அறிக்கை 2025 ஐப் பெற்றார்.

ஏபெக் முழுவதும் கொள்கை விவாதங்களில், குறிப்பாக மக்களின் நல்வாழ்வு, பொருளாதார நீதி மற்றும் சமநிலையான பிராந்திய வளர்ச்சியை மையமாகக் கொண்ட ஒரு நிகழ்ச்சி நிரலை ஆதரிப்பதில், ஒரு முக்கிய உள்ளீடாகப் பயன்படுத்தப்படுவதற்காக இந்த அறிக்கையை ஆய்வு செய்வதாக அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset