நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப் குற்றவாளியா அல்லது விடுதலை செய்யப்படுவாரா?: டிசம்பர் 26ஆம் தேதி தீர்ப்பு

புத்ராஜெயா:

ஏழு ஆண்டு விசாரணைக்குப் பிறகு 1 எம்டிபி நிறுவனத்திடமிருந்து 2.3 பில்லியன் ரிங்கிட் முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் குற்றவாளி என அறிவிக்கப்படுவாரா அல்லது விடுவிக்கப்படுவாரா என்பதை டிசம்பர் 26 அன்று உயர் நீதிமன்றம் முடிவு செய்யும்.

நீதிபதி டத்தோ கோலின் லாரன்ஸ் செக்வேராவும் நவம்பர் 4ஆம் தேதியை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவாக நிர்ணயித்தார்.

பாதுகாப்புக் குழு இன்று தனது வாய்மொழி சமர்ப்பிப்புகளை முடிக்கவிருந்தது.

ஆனால் அது அடுத்த செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு நவம்பர் 4 வரை தொடரும்.

இருப்பினும் டிசம்பர் 26 ஆம் தேதி அதாவது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு அடுத்த நாள் நான் முடிவை அறிவிப்பேன் என்று நீதிபதி கூறினார்.

உலகளாவிய கவனத்தை ஈர்த்த இந்த உயர்மட்ட விசாரணை, அக்டோபர் 21ஆம் தேதியன்று தொடங்கிய 10 நாட்கள் இறுதி வாதங்கள் உட்பட மொத்தம் 303 நாட்கள் நீடித்தது.

நஜிப் செப்டம்பர் 20, 2018 அன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அதே நேரத்தில் விசாரணையின் முதல் நாள் 2019 ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று விசாரிக்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset