 
 செய்திகள் மலேசியா
ஜெய்ன் ராயன் தாயார் இஸ்மானிராவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை: தண்டனையை உடனடியாகத் தொடங்க நீதிபதி உத்தரவு
கோலாலம்பூர்:
மறைந்த ஜெய்ன் ராயன் அப்துல் மடீனின் தாயாருக்கு இன்று ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உடல் ரீதியாக காயம் ஏற்பட்டதற்கு அவரின் கவனக்குறைவு காரணமாகும்.
மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜெய்ன் ராயனுக்கு உடல் ரீதியாக காயம் ஏற்பட்டதற்காக குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, இஸ்மானிராவுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது.
தண்டனையைக் குறைக்கக் கோரிய பிரதிவாதிகளின் மேல்முறையீடு, அரசுத் தரப்பின் வாதங்களை விசாரித்த பின்னர், செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி டாக்டர் சியாலிசா வார்னோ இந்த தண்டனையை வழங்கினார்.
30 வயதான இஸ்மானிராவுக்கு இன்று உடனடியாக சிறைத்தண்டனையைத் தொடங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கூடுதலாக 3,000 ரிங்கிட் ஜாமீன், ஒரு உத்தரவாதத்துடன் இரண்டு வருட நன்னடத்தை உத்தரவும் விதிக்கப்பட்டது.
மேலும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் குற்றம் சாட்டப்பட்டவர் 120 மணிநேர சமூக சேவையை மேற்கொள்ள வேண்டும் என்றும் சியாலிசா உத்தரவிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 31, 2025, 6:06 pm
புனிதன் எம்ஐபிபி கட்சியின் உறுப்பினர் அல்ல; ஆண்டுக் கூட்டம் தொடர்பில் ஆர்ஓஎஸ்சிடம் புகார்: சந்திரசேகரன்
October 31, 2025, 2:54 pm
நஜிப் குற்றவாளியா அல்லது விடுதலை செய்யப்படுவாரா?: டிசம்பர் 26ஆம் தேதி தீர்ப்பு
October 31, 2025, 2:53 pm
ஹம்சாவை பதவி நீக்கம் செய்வது குறித்து ஆலோசனை பெற மொஹைதின் என்னை சந்திக்கவில்லை: துன் மகாதீர்
October 31, 2025, 2:52 pm
உலகளாவிய வடக்கு, தெற்கு நாடுகளுக்கு இடையிலான இடைவெளியை ஏபெக் குறைக்க வேண்டும்: பிரதமர்
October 31, 2025, 2:50 pm

 
  
  
  
  
  
  
  
  
  
  
 