நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

6ஆவது தலைமுறையினருக்கு ஓஐசி அட்டை நீட்டிக்கப்பட்டுள்ளது: இந்திய தூதரகம் அறிவிப்பு

கோலாலம்பூர்:

வெளி நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் ஓஐசி பதிவு செய்வது இப்போது ஆறாவது தலைமுறை சந்ததியினருக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்திய தூதரகம் இதனை அறிவித்தது.

மலேசிய விண்ணப்பதாரர்களுக்கு இந்திய வம்சாவளியின் நடைமுறைகள் மேலும் திருத்தப்பட்டுள்ளன. இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கும், கல்வி, கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

கடந்த ஜூலை மாதம், பல விண்ணப்பதாரர்கள் தொலைந்து போன அல்லது கிடைக்காத வரலாற்று ஆவணங்கள், பழைய கடப்பிதழ் ஆவணங்கள் காரணமாக வம்சாவளியைச் சான்றளிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டதால், மலேசிய இந்தியர்களுக்கான ஓஐசி விண்ணப்ப செயல்முறையை எளிமைப்படுத்த இந்தியா செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

மலேசிய அரசாங்கத்தால் அல்லது முன்னாள் மலாயா அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஆவணங்களை ஏற்றுக் கொள்ள முடியும் என்பதை எங்கள் அரசாங்கத்தால் ஒப்புக்கொள்ள வைக்க நாங்கள் முயற்சித்தோம். 

இந்தியாவை பிறப்பிடமாக அடையாளம் காட்டும் ஆவணம் இருந்தால், நாங்கள் ஓஐசி அட்டையை வழங்க முடியும் என்று மலேசியாவிற்கான இந்தியத் தூதர் பி.என். ரெட்டி கூறினார்.

மேலும்  இந்திய உதவித்தொகை, அறக்கட்டளை நிதி (ISTF) கூடுதலாக 3 மில்லியன் ரிங்கிட்டு  உயர்த்தப்படும் என்றார் அவர்.

இது மலேசிய இந்திய சமூகத்தின் நிதி ரீதியாக பலவீனமான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஒரு முறை நிதி உதவியை வழங்குகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset