நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புனிதன் எம்ஐபிபி கட்சியின் உறுப்பினர் அல்ல; ஆண்டுக் கூட்டம் தொடர்பில் ஆர்ஓஎஸ்சிடம் புகார்: சந்திரசேகரன்

பெட்டாலிங் ஜெயா:

புனிதன் எம்ஐபிபி கட்சியின் உறுப்பினர் அல்ல. இதனால் அவர் தலைவராக முடியாது.

அக்கட்சியின் தோற்றுநரும் முன்னாள் தலைவருமான சந்திரசேகரன் இவ்வாறு கூறினார்.

எம்ஐபிபி எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சியின் மாநாடு கடந்த அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற்றது.

இந்த மாநாடு கட்சியின் விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படவில்லை.

இதனால் அக்கட்சிக் கூட்டம் செல்லுப்படியாகாது.

அதே வேளையில் புனிதன் கட்சியின் உறுப்பினர் அல்ல. இதனால் அவர் தலைவராக இருக்க முடியாது.

ஆக இந்த விவகாரங்கள் தொடர்பில் ஆர்ஓஎஸ்சிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இப்புகாரின் அடிப்படையில் ஆர்ஓஎஸ் உரிய விசாரணைகளை நடத்தி வருகிறது.

அந்த விசாரணையின் முடிவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

மேலும் ஒரு தலைவர் சுயநலத்துடன் செயல்பட முடியாது.

தனக்கும் தன் நண்பர்களுக்கும் என்ன கிடைக்கிறது என்ற சிந்தனையில் அவர் இருக்கக் கூடாது.

குறிப்பாக தலைவருக்கு தலைமைத்துவம் மிகவும் அவசியமாகும்.

அந்த தலைமைத்துவம் இல்லாத புனிதன் எம்ஐபிபி கட்சிக்கு  தலைவராக முடியாது.

பெட்டாலிங் ஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சந்திரசேகரன் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset