நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹம்சாவை பதவி நீக்கம் செய்வது குறித்து ஆலோசனை பெற மொஹைதின் என்னை சந்திக்கவில்லை: துன் மகாதீர்

கோலாலம்பூர்:

ஹம்சாவை பதவி நீக்கம் செய்வது குறித்து ஆலோசனை பெற மொஹைதின் என்னை சந்திக்கவில்லை.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இதனை வலியுறுத்தினார்.

கடந்த செப்டம்பரில் பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் தலைவர் பதவியை ஒப்படைப்பதாக கூறப்படும் கடிதம் பரவியது.

இதைத் தொடர்ந்து, பெர்சத்து உறுப்பினர்களுக்கு மொஹைதின் மீதான தனது விசுவாசத்தை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா உறுதிப்படுத்த முயன்றார்.

இந்நிலையில் ஹம்சாவின் பதவி நீக்கம் குறித்து ஆலோசனை பெறுவதற்காக மொஹைதின் கடந்த மாதம் மகாதீரை அவரது இல்லத்தில் சந்தித்ததாகவும், அந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் அஸ்மின் அலி, உதவித் தலைவர் அகமது பைசல் அசுமு ஆகியோரும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் அப்படி ஒரு சந்திப்பு நடக்கவில்லை துன் மகாதீர் கூறினார்.

இல்லை, ஹம்சாவை பதவி நீக்கம் செய்வது குறித்து ஆலோசனை கேட்க மொஹைதின் என்னைப் பார்க்க வரவில்லை. நிச்சயமாக இல்லை.

மலாய் ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கும் தனது முக்கிய குறிக்கோளை அது பாதிக்கும் என்பதால், தான் கோஷ்டிவாதத்தை எதிர்க்கிறேன் என்று என்று துன் மகாதீர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset