நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகளாவிய வடக்கு, தெற்கு நாடுகளுக்கு இடையிலான இடைவெளியை ஏபெக் குறைக்க வேண்டும்: பிரதமர்

கியோங்ஜு:

ஆசிய,  பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பை (ஏபெக்) லத்தீன் அமெரிக்க,  ஆப்பிரிக்க பொருளாதாரங்களை உள்ளடக்கியதாக அதன் ஈடுபாட்டை விரிவுபடுத்த வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தியுள்ளார்.

முறையான அல்லது முறைசாரா ஒத்துழைப்பு மூலம் இரு பிராந்தியங்களின் பரந்த பங்கேற்பு, ஒரு நியாயமான உலகளாவிய பொருளாதார கட்டமைப்பை வடிவமைக்க வேண்டும்.

மேலும் உலகளாவிய வடக்கு, தெற்கில் உள்ள நாடுகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கவும் உதவ வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

லத்தீன் அமெரிக்க,  ஆப்பிரிக்க பொருளாதாரங்களின் அதிக பங்கேற்பு, முறையான அல்லது முறைசாரா ஈடுபாட்டின் மூலம் ஏபெக் நிகழ்ச்சி நிரலை உண்மையிலேயே மாற்றத்தக்க, உள்ளடக்கிய, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

இன்று ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தின் முழுமையான அமர்வில் தனது  உரையில் பிரதமர் இவ்வாறு கூறினார்.

தற்போது, ​ ஏபெக் 21 பொருளாதாரங்களைக் கொண்டுள்ளது.

இதில் மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற உலகளாவிய தெற்கிலிருந்து பலவும், அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற உலகளாவிய வடக்கிலிருந்து முன்னேறிய பொருளாதாரங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset