நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்காவை மகிழ்விக்க அரசாங்கம் இறையாண்மையை விற்பனை செய்வதாக மகாதிர் குற்றம் சாட்டுகிறார்

கோலாலம்பூர்:

அமெரிக்காவை மகிழ்விக்க அரசாங்கம் இறையாண்மையை விற்பனை செய்வதாக முன்னாள் பிரதமர் துன் மகாதிர் குற்றம் சாட்டினார்.

மலேசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் அரசாங்கத்தின் நடவடிக்கையை நான் கண்டிக்கிறேன்.

புத்ராஜெயா ஒரு உலக வல்லரசைத் திருப்திப்படுத்த நாட்டின் இறையாண்மையை விற்றுவிடுகிறது.

இந்த நடவடிக்கையை நவீன ஏகாதிபத்தியத்தின் ஒரு வடிவம்.

நாட்டின் ஸ்தாபக தந்தைகள் நீண்ட காலமாக பொருளாதார ஒத்துழைப்பு என்ற பெயரில் புதிய வடிவிலான காலனித்துவத்தின் ஆபத்துகள் குறித்து எச்சரித்திருந்தனர் என்பதை மக்களுக்கு அவர் நினைவூட்டினார்.

இது நாம் பாதுகாத்து கட்டியெழுப்பிய பொருளாதார சுதந்திரங்களின் சரணடைதல் ஆகும்.

எனவே, வர்த்தகம், ஒத்துழைப்பு அல்லது ராஜதந்திரத்தின் மொழிக்குப் பின்னால் அதை மறைப்பதை நிறுத்துங்கள்.

உங்களுக்கு தைரியம் இல்லாததால், அந்நிய சக்திகளை மகிழ்விக்க விரும்புவதால், நீங்கள் எங்கள் சுதந்திரத்தை விற்று விட்டீர்கள் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள்.

பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அட்டூழியங்களை அமெரிக்க  ஆதரிக்கிறது. இதுவொரு வல்லரசு சக்திகாகும்.

அந்த சக்திதான் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை ஆதரித்து செயல்படுத்துகிறது என்று அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset