நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோப்பெங் தமிழ்ப்பள்ளி கட்டடம் அடுத்தாண்டு கட்டப்படும்: தான் கா இங்

கோப்பெங்:

கோப்பெங் தமிழ்ப்பள்ளி கட்டடம் பல்லாண்டுகளாக கரையான் அரிப்பால் அழிந்து கொண்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் பொருட்டு ஒரு புதிய கட்டடம் இப் பள்ளி வளாகத்தில் நிர்மாணிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கோப்பெங் நாடாளுமன்ற உறுப்பினர் தான் கா இங் இங்குள்ள "தீபாவளியை அறிவோம்" நிகழ்வில் கலந்துகொண்ட வேளையில் கூறினார்.

இப் பள்ளியில் கரையான் அரிப்பு பெரும் பாதிப்பை கொண்டு வந்துள்ளது. இதனால் பள்ளி கட்டடங்கள் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. இப் பிரச்சினைக்கு அதிரடி தீர்வு எடுக்க தவறினால் மாணவர்களும், ஆசிரியர்களும் இன்னும் அதிகமான் பிரச்சினைகளை எதிர்நோக்கலாம் என்று அவர் எச்சரித்தார்.

அதன் அடிப்படையில் கல்வி அமைச்சின் மானிய உதவியோடு அடுத்தாண்டு புதிய பள்ளி கட்டடம் நிர்மாணிக்க செயல்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த புதிய கட்டடம் நிர்மாணித்தவுடன் இங்கே அதிகமான இந்திய மாணவர்கள் படிக்க முன்வரலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இத்தொகுதியின் மகளிர் பிரிவினர் தீபாவளி பலகாரங்களை சமைக்கும் நிலைப்பாடு குறித்தும், சமையல் போட்டிகளை ஏற்பாடு செய்தனர்.

அத்துடன், இங்கு இந்தியர்களின் பாரம்பரிய உடைகளை இந்தியர்களை தவிர்த்து மற்ற இன சகோதரிகள் அணிந்து மகிழும் செயல்நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டதாக இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் சண்முகம் என்ற பாலு கூறினார்.

இந் நிகழ்வின் நிறைவுவிழாவில் வர்ணம் தீட்டும் போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்திய குடும்பத்தினருக்கு தீபாவளி உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

இத்தொகுதியின் பல இன மகளிர்கள் ஒன்றிணந்து இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்தனர் .

நிகழ்வில் சிறப்பு பிரமுகராக தேஜா சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சந்திரா இங், சிம்பாங் பூலாய் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர்
 கலந்து சிறப்பித்தனர்.

- ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset