நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026ஆம் ஆண்டு பள்ளி தவணை ஜனவரி 11ஆம் தேதி தொடங்குகிறது: ஃபட்லினா

கோலாலம்பூர் -
2026ஆம் ஆண்டு பள்ளி அமர்வுகள்  ஜனவரி 11ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.

கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.

2026 கல்வி நாட்காட்டியின் அடிப்படையில் பிரிவு ஏ மாநிலங்களுக்கு 2016 ஜனவரி 11 முதல் டிசம்பர் 31 வரை நீடிக்கும்.

பிரிவு பி  மாநிலங்களுக்கு 2026 ஜனவரி 12, முதல் டிசம்பர் 31 வரையிலும் நீடிக்கும்.

பிரிவு ஏ என்பது கெடா, கிளந்தான், திரங்கானு மாநிலங்களை உள்ளடக்கியது.

பிரிவு பி என்பது ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங், பேரா, பெர்லிஸ், பினாங்கு, சபா, சரவா, சிலாங்கூர், கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம், லாபுவான், புத்ராஜெயா ஆகிய மாநிலங்கள் ஆகும்.

2026 கல்வி நாட்காட்டியை KPM போர்ட்டலில் இருந்து https://www.moe.gov.my/surat-siaran-kpm-bil-3-tahun2025-kalendar-akademi என்ற இணைப்பு வழியாக பதிவிறக்கம் செய்யலாம்.

பள்ளி அமர்வை ஜனவரி மாதத்திற்கு வெற்றிகரமாகத் திரும்புவது கட்டங்களாகவும் ஒழுங்காகவும் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்காமல் மேற்கொள்ளப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset