செய்திகள் மலேசியா
புக்கிட் கமுனிங் முனீஸ்வரர் ஆலய நிலப் பிரச்சனைக்கு தீர்வு: பிரகாஷ்
ஷாஆலம்:
இங்குள்ள ஜாலான் புக்கிட் கமுனிங் முனீஸ்வரர் ஆலய நிலப் பிரச்சினைக்கு உகந்த தீர்வு எட்டப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் இதனை தெரிவித்தார்.
முன்னாள் ஆலயமும் புதிய ஆலயத்தின் பிரதிநிதிகளும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் எங் சியூ லிம் அலுவலகத்தில் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின்னர் நிரந்தர தீர்வு காணப்பட்டது.
மூனிஸ்வரர் ஆலயத்தை புதிய இடத்திற்கு மாற்றுவதற்கு இருதரப்பினரும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
அத்துடன், பழைய இடத்திலிருந்து புதிய இடத்திற்கு ஆலயத்தை மாற்றும் முழு செலவையும் ஏற்க சம்பந்தப்பட்ட தரப்புகள் சம்மதித்துள்ளனர்.
நேற்று சிலைகளை பாதுகாப்பாக மாற்றும் பணியும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இந்த முயற்சியை இணக்கத்துடனும், சமாதானத்துடனும் நிறைவேற்ற உதவிய சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஹியான் ஹான், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், கவுன்சிலர் யோகேஸ்வரி
அனைவருக்கும் மனமார்ந்த நன்றி மற்றும் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துக் கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 1, 2026, 8:46 pm
பத்துமலையின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு துணையாகவும் ஆதரவாகவும் இருப்பேன்: கோபிந்த் சிங்
February 1, 2026, 8:45 pm
பத்துமலையின் மேம்பாட்டிற்காக இறுதி மூச்சு வரை உழைப்பேன்: டான்ஸ்ரீ நடராஜா
February 1, 2026, 8:44 pm
டத்தோ ரெனா இராமலிங்கம் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்
February 1, 2026, 10:49 am
பத்துமலையில் தைப்பூச உற்சவம்: பக்திப் பரவசத்தில் பக்தர்கள்
January 31, 2026, 8:53 pm
இடியுடன் கூடிய கனமழை: ஆறு மாநிலங்களுக்கு வானிலை எச்சரிக்கை
January 31, 2026, 6:42 pm
பெண்ணின் அந்தரங்க வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய வெளிநாட்டவர் கைது
January 31, 2026, 5:59 pm
கூர்மையான ஞானவேல் கொண்டு நவீன உலகின் சவால்களை வெல்வோம்: டத்தோஸ்ரீ ரமணன்
January 31, 2026, 5:14 pm
