நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடுத்த ஆண்டு 70,000 இலவச ஹெல்மெட்டுகள் விநியோகிக்கப்படும்: அந்தோனி லோக்

கோலாலம்பூர்:

அடுத்த ஆண்டு 70,000 இலவச ஹெல்மெட்டுகள் விநியோகிக்கப்படும்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோனி லோக் இதனை கூறினார்.

சாலைப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக சிறப்புப் பதிவு எண்கள் விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியைப் பயன்படுத்தி, அடுத்த ஆண்டு 70,000 இலவச ஹெல்மெட்களை அரசாங்கம் விநியோகிக்கும்.

2024ஆம் ஆண்டில் மொத்தம் 60,964 ஹெல்மெட்டுகள் விநியோகிக்கும்.

கடந்த செப்டம்பர் மாதம் வரை, மொத்தம் 32,323 பெரியவர்கள், குழந்தைகளுக்கான ஹெல்மெட்டுகள் இலவசமாக வழங்கப்படும்.

இந்த முயற்சி சிரிம் தரநிலைகளுக்கு இணங்க ஹெல்மெட்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

சாலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், பின்னால் அமர்ந்திருப்பவர்களின் பாதுகாப்பு மிகவும் உத்தரவாதமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மடானி மக்கள் திட்டம், மட்ச்ச்னி தத்தெடுப்பு கிராமத் திட்டம் உட்பட நாடு தழுவிய பல்வேறு சாலைப் பாதுகாப்பு ஆதரவுத் திட்டங்கள் மூலம் இந்த ஹெல்மெட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன.

இதில் அரசு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், மூலோபாய சாலைப் பாதுகாப்பு கூட்டாளிகள் பங்கேற்கின்றனர் என்று அவர் கூறினார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset