நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கத்தின் உதவித்திட்டங்களில் மக்கள் பங்கேற்று இன்புற வேண்டும்: வ.சிவகுமார்

பத்துகாஜா:

அடுத்தாண்டு பத்துகாஜா நாடாளுமன்ற தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு  இங்குள்ள இந்தியன் செட்டல்மென் அல்லது டேசா செங்காட்டில் நடைபெற ஏற்பாடு செய்யப்படும் என்று இங்குள்ள மக்களுக்கு உணவுப்பொருள் வழங்கும் நிகழ்வில் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் கூறினார்.

இவ்வாண்டு ஜெலப்பாங் வணிக தளத்தில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நடைபெற்றது. இத்தொகுதி மிகப் பெரிய தொகுதி என்பதால் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பகுதிகளில் நடத்த வேண்டிய நிலைப்பாடு உருவாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது அரசாங்கம் மக்கள் வீட்டிற்கு தேவையான உணவுப்பொருட்கள் வாங்குவதற்கு 100 ரிங்கிட் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

அதுமட்டுமின்றி, வாகனங்கள் பயன்படுத்துவோருக்கு உதவித்தொகை திட்டத்தையும் தற்போது அமலாக்கம் செய்து வருகின்றனர். குறிப்பாக, ஒரு லிட்டர் ரோன் 95 பெட்ரோலின் விலை 1.99 ரிங்கிட்டாகும். இத்தகைய உதவித்திட்டங்கள் வாயிலாக மக்களின் சுமையை குறைக்க வழிவகை செய்கிறது என்று அவர் தெரிவித்தார்.

மலேசிய பெருநாள் காலங்களில் அதிகமான மக்கள் நெடுஞ்சாலையை பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாகும். அதன் அடிப்படையில் டோல் கட்டணம் இல்லாமல் இலவசமாகவும் அல்லது 50 சதவீத கழிவு என்ற அடிப்படையில் மக்களின் தேவையை அறிந்து அரசாங்கம் செயல்படுகிறது. அந்த வகையில் இம்முறை தீபாவளியை முன்னிட்டு முதல் இரு நாட்களுக்கு நெடுஞ்சாலையை பயன்படுத்துபவர்களுக்கு 50 சதவீதம் கழிவு வழங்கப்படுவதை அவர் நினைவுறுத்தினார்.

தற்போது நாடு தழுவிய நிலையில் " ரஹ்மா வியாபார திட்டம்" அமலாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக வீட்டிற்கு தேவையான சமையல் பொருட்களை மலிவான விலையில் இங்கே விற்கப்படுகிறது. ஆகையால், இத்திட்டத்தில் அல்லது வியாபார சந்தையில் மக்கள் பொருட்கள் வாங்க முற்படுவது மிக அவசியமாகும். இதன் வாயிலாக பணத்தை விரயம் செய்யாமல் சேமிக்க முடியும் என்று அவர் உறுதியுடன் கருத்துரைத்தார்.

டேசா செங்காட் கே.ஆர்.தி , மக்கள் சேவை இயக்கமும் ஒன்றிணைந்து இந்நிகழ்வினை தலைவர் ரவீன் மற்றும் செயலாளர் ரகு தலைமையில் சிறப்பாக நடந்தேறியது. இங்குள்ள இந்திய குடும்பத்தினருக்கு உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டன.

ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset