நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

47ஆவது ஆசியான் உச்சி மாநாடு நிறைவடைந்தது: மலேசியா தலைமைப் பொறுப்பை பிலிப்பைன்ஸிடம் ஒப்படைத்தது

கோலாலம்பூர்:

மலேசியா இன்று ஆசியான் தலைமைப் பொறுப்பை பிலிப்பைன்ஸிடம் ஒப்படைத்தது.

இதன் மூலம் இந்த ஆண்டு 47ஆவது ஆசியான் உச்ச நிலைமாநாடு, தொடர்புடைய கூட்டங்களின் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்த மாநாட்டில் அடையாளமான சுத்தியலை மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரிடம் ஒப்படைத்தார்.

மாநாட்டில் தனது உரையை முடிப்பதற்கு முன் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, தொழில்முறையுடன் இந்த ஆண்டு ஆசியான் தலைவராக மலேசியாவின் பொறுப்பை வெற்றிகரமாக மாற்றிய அதிகாரிகள், தன்னார்வலர்கள், நண்பர்களுக்கு பிரதமர் நன்றியைத் தெரிவித்தார்.

இந்த சவாலான ஆண்டு முழுவதும் பொறுமை, தாராள மனப்பான்மைக்காக மலேசிய மக்களுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

நீங்கள் எங்கள் விருந்தினர்களை அன்புடன் வரவேற்றுள்ளீர்கள். ஒவ்வொரு இடையூறுக்கும் ஏற்றவாறு மாற்றியமைத்துள்ளீர்கள், மேலும் விருந்தோம்பல் என்பது எங்கள் வழக்கம் மட்டுமல்ல, எங்கள் குணத்தின் பிரதிபலிப்பு என்பதை பிராந்தியத்திற்கு நினைவூட்டியுள்ளீர்கள்.

உங்கள் கைகளில், பொறுப்பு சேவையாக மாறியுள்ளது.

சேவை நாட்டின் மீதான அன்பின் அடையாளமாக மாறியுள்ளது. உலகத்தின் பார்வையில், நீங்கள் மலேசியாவின் சிறந்ததைக் காட்டியுள்ளீர்கள்.

அதனுடன், 47ஆவது ஆசியான் உச்சி மாநாடு மற்றும் தொடர்புடைய கூட்டங்கள் நிறைவடைந்ததாக நான் அறிவிக்கிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset