நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்காவைப் பார்த்து நாம் பயந்தால், சீனாவுடன் எப்படி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும்: பிரதமர்

கோலாலம்பூர்:

மலேசியாவும் ஆசியானும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைப் பார்த்து பயப்படுவதாக சில தரப்பினர் கூறிய கூற்றுகளை தாம் மறுப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இன்று கையெழுத்தான ஆசியான்-சீனா சுதந்திர வர்த்தகப் பகுதி ஒப்பந்தத்தை அனைவரும் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக மலேசியா உட்பட 11 நாடுகளின் ஒத்துழைப்பு கூட்டமைப்பு பயப்படவில்லை என்பதற்கான சான்று இந்த ஒப்பந்தமாகும்.

நாங்கள் அமெரிக்காவைப் பார்த்து பயந்தால், சீனாவுடன் எப்படி ஒப்பந்தத்தில் கையொப்பமிட முடியும்.

47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாடு,  தொடர்புடைய உச்ச நிலை மாநாடுகளின் நிறைவுடன் இணைந்து ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார்.

இதற்கிடையில், மலேசியா ஒரு மிதமான அணுகுமுறையையும் மையத்துவத்தையும் பேணுகிறது என்று பிரதமர் வலியுறுத்தினார்.

அதாவது இந்த நாடு அனைவருடனும் இணையவும் நட்பாகவும் இருக்க முடியும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset