நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராக்கில் சீனி இல்லா தீபாவளி விழாவில் சுல்தான் பங்கேற்பு; தீப ஒளியால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கும் நம் நாடு ஒளி பெற வேண்டும்; மந்திரி பெசார்

ஈப்போ: 

பேராக் மாநில தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு இங்குள்ள இந்திரா மூலியா அரங்கத்தின் வளாகத்தில் சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பேராக் மாநில சுல்தான் நஸ்ரின் ஷா தம்பதியர், ராஜா மூடா, ராஜா டி ஹீலிர் ஆகிய அரச குடும்பத்தினர் கலந்துக்கொண்டனர். அவர்களுடன் பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரனி முகமட் தம்பதியர், ஆட்சிக்குழு உறுப்பினர் கள் கலந்து சிறப்பித்தனர்.

சிறப்பு பிரமுகர்கள் வருகையளித்த பின் முறையாக நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இம்முறை முதல் முறையாக நிகழ்ச்சி நெறியாளராக இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக நிகழ்ச்சி நெறியாளர் விக்னேஸ்வரி நிகழ்ச்சியை வழிநடத்தினார். தமிழ்மொழியிலும், தேசிய மொழியிலும் அவர் நிகழ்ச்சியை சிறப்பாக தொடக்கினார். அவருடன் ஆர்.டி.எம். நிகழ்ச்சி நெறியாளர் தேசிய மொழியில் வழிநடத்தினார்.

எந்தவொரு அதிகாரப்பூர்வ நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக தேசிய கீதமும், பேராக் மாநில பண்ணும் ஒலிபரப்பு செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால், இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் தேசிய கீதமும், மாநில பண்ணும் இடம் பெறவில்லை. ஏன்? என்ன காரணம் என்று தெரியவில்லை. இவ்விவகாரம் குறித்து பலர் தங்கள் மனக்குமுறலை தொடர்புக் கொண்டு தெரிவித்தனர்.

இன்றைய காலக்கட்டத்தில் நம் நாடு பல சவால்களை எதிர்நோக்கி வருகிறது. பள்ளிகளில் வன்செயல் நடவடிக்கைகள், உயர்கல்வி கூடங்களில் பல்வேறு பிரச்சினைகள் நடந்தேறி வருகின்றன. இதனைத் தொடர்ந்து வெள்ளப் பிரச்சினையும் கடுமையாக இருந்து வருகிறது.

இந்த தீபாவளியின் தீப ஒளியால் அனைத்து பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்று உறுதியாக நம்புவோம் என்று பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரனி முஹம்மத் கூறினார்.

மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு சீனி இல்லாத தீபாவளி விருந்தோம்பல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலர் பானங்கள், தேநீர் பயன்பாடும் இம்முறை குறைக்கப்பட்டுள்ளது. இது சீனியை குறைக்கும் சிந்தனை மாற்றம் மக்களிடையே உருவாக வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்கு இந்த சீனியை புறக்கணிப்பு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஏற்பாட்டுக்குழு தலைவரும், ஆட்சிக்குழு உறுப்பினருமான அ.சிவநேசன் கூறினார்.

இந்நிகழ்வின் நிறைவு விழாவில் ஆதரவற்ற இந்திய சிறுவர்களுக்கு சுல்தான் தம்பதியர்  பணமுடிப்பு வழங்கி மகிழ்வித்தனர். இந்நிகழ்வில், இந்திய கலை பண்பாட்டு நடனங்கள், தமிழ் பாடல்கள், பல இனத்தாரின் நடனங்கள் அரங்கேறின.

- ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset