நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

கத்ரீனா கைப்பின்  திருமணம் ராஜஸ்தான்  கோட்டையில் நடைபெறுகிறது 

மும்பை:

பிரபல இந்தி நடிகை கத்ரீனா கைப், நடிகர் விக்கி கவுசல் திருமணம் வருகிற 9ஆம் தேதி திருமணத்தை நடத்த உள்ளனர். இவர்கள் நீண்ட நாட்களாக காதலித்து தற்போது திருமணத்துக்கு தயாராகி உள்ளனர்.

திருமண ஏற்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.  ராஜஸ்தானில் உள்ள 700 வருட பழமையான சிக்ஸ் சென்ஸ் கோட்டையில் இந்தத்  திருமணத்தை நடத்த உள்ளனர். 

அந்த கோட்டை கோடிக்கணக்கான செலவில், மலர்கள், வண்ண விளக்குகள் வரவேற்பு வளைவுகளால் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. 

Katrina Kaif-Vicky Kaushal wedding: Here's all about the venue in Sawai  Madhopur and how much costs | Bollywood - Hindustan Times

திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள், நடிகர், நடிகைகள் அழைக்கப்பட்டு உள்ளனர். திருமணத்துக்காக மணமக்கள் தங்கும் சொகுசு விடுதி அறையின் ஒரு நாள் வாடகை ரூ.4 லட்சம். 

மேலும் உறவினர்கள், நடிகர் நடிகைகள் தங்க அங்குள்ள ஆடம்பர ஓட்டல்களின் அறைகள் அனைத்தையும் முன்பதிவு செய்துள்ளனர். 

திருமணத்துக்கு ஷாருக்கான், அமீர்கான்,  சல்மான்கான், ரன்பீர்கபூர், அலியாபட், தீபிகா படுகோன், அனில் கபூர் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் அழைக்கப்பட்டு உள்ளனர்.  

சங்கீத், மெஹந்தி என்று தொடர்ந்து 3 நாட்கள் ஆடம்பரமாக திருமண விழா நடைபெற உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

+ - reset