செய்திகள் கலைகள்
ரஹ்மான் இந்தியாவின் நவீன அடையாளங்களின் ஒருவர்: அவரை குறை கூறுபவர்கள் அவர் இடத்தை நெருங்க முடியாது
அடக்கத்தின் அடையாளமாக, அளவிடற்கரிதான ஞானத்தின் உறைவிடமாக, எல்லோருக்கும் இனிமையானவராக வெளிப்படுபவர் இசைமேதை ஏ.ஆர்.ரஹ்மான்
புறங்கூறுதல் என்பதும் புலம்பல் என்பதும் ரஹ்மானின் வாழ்நாளிலே எப்போதுமே இருந்ததில்லை.
இறை சக்தியின் பரிபூரணமான ஆசி பெற்றவராகத் தான் நான் ஏ.ஆர்.ரஹ்மானைப் பார்க்கிறேன்.
சமீபத்தில் நான் மிகவும் ரசித்து படித்தது ஏ.ஆர்.ரஹ்மானின் ஹருண் ரஷித் உடனான பி.பி.சி நேர்காணல்;
’’1999 –ல், தால் வெளியாகும் வரை நீங்கள் பாலிவுட்டில் ஒரு வெளியாள் போலவே உணர்ந்ததாகக் கூறினீர்கள். ரோஜா 1992இல் வெளியான அடுத்த ஏழெட்டு ஆண்டுகளுக்கு, பாம்பே, தில் சே, ரங்கீலா, தால் எனப் பல படங்களுக்கு மிகவும் அற்புதமான இசையை நீங்கள் தந்தீர்கள். எனினும் உங்களை ஒரு வெளியாள் என்று உணர்ந்தீர்கள் என்றால், நீங்கள் அவர்களில் ஒருவராக உணர்ந்ததே இல்லையா?’’
’’அதற்குக் காரணம், நான் இந்தி மொழி பேசியதே இல்லை என்பதுதான் என நினைக்கிறேன். குறிப்பாக ஒரு தமிழருக்கு இந்தி கற்றுக் கொள்வது மிகவும் சிரமமான காரியம். ஏனெனில், எங்களுக்கு தமிழ்ப் பற்று அபரிமிதமாக உள்ளது. நான் இந்தி படங்களுக்கு இசை அமைக்கத் தொடங்கிய காலம் வரை எந்தவொரு தென்னிந்திய இசையமைப்பாளரும் எல்லைகளைக் கடந்து இந்தி திரையுலகுக்குச் சென்று நிலைத்தது இல்லை…
அப்படியிருந்த சூழலில் எல்லையைக் கடந்து சென்றது, பின்னர் அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டது என்பது ஒரு மிகப்பெரிய அனுபவம். இன்னமும் அது நிலைத்திருக்கிறது. அது மிகவும் அற்புதமானது, அதை கௌரவமாகக் கருதுகிறேன்’’
’’பாலிவுட்டில் தமிழ் சமூகத்திற்கு எதிராக இன்றும் நிறைய பாகுபாடு நிலவுவதை நான் பார்க்கிறேன். 90களில் அது எப்படி இருந்தது? நீங்கள் எப்போதாவது அதை எதிர்கொண்டீர்களா?’’ என்ற கேள்விக்கு
’’நான் எதிர்கொள்ளாமல் இருந்திருக்கலாம். அந்த விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரிய வரவில்லை. ஒருவேளை கடவுள் இவற்றையெல்லாம் எனக்கு மறைத்திருக்கலாம். ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் இவற்றைப் பார்க்கிறேன்.. ஒருவேளை அதிகார மாற்றம் நடந்திருக்கலாம். முடிவெடுக்கும் அதிகாரம் படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் இப்போது இருக்கிறது.
இது என் கண் முன்பாக நடக்கவில்லை. ஆனால், 'அவர்கள் உங்களை ஒப்பந்தம் செய்தார்கள், ஆனால் மற்றொரு இசை நிறுவனம் சென்று அந்தப் படத்திற்கு நிதியுதவி செய்து, தங்கள் வேறு இசையமைப்பாளர்களைப் பயன்படுத்திக் கொண்டது' போன்ற ஹாசிப்களை நான் கேள்விப்படுகிறேன். அதைக் கேட்கும்போது, 'ஓ நல்லது, எனக்கு ஓய்வு கிடைத்தது. நான் என் குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிப்பேன்' என்று நினைத்துக் கொள்வேன்’’
’’ஆனால், அதை அப்படி எடுத்துக் கொள்ள உங்களுக்கு மிகவும் நேர்மறையான மனநிலை இருக்க வேண்டுமே..’’ எனக் கேட்கிறார், ஹருண் ரஷித்.
அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான், ’’வேலையைத் தேடி நான் செல்வதில்லை. வேலை என்னைத் தேடி வரவேண்டுமென விரும்புகிறேன். நான் செய்யும் வேலை, அதிலுள்ள நேர்மை ஆகியவற்றின் மூலம் எனக்கு எல்லாம் கிடைக்க வேண்டுமென்று விரும்புகிறேன்’’
’’நீங்கள் நாளுக்கு நாள் மென்மேலும் பிளவுகளை எதிர்கொள்ளும் சூழலில் பணியாற்றுகிறீர்கள்... அல்லவா?’’
’’ஆம். அதனால் தான், கடவுள் நம்மைப் போன்றவர்களுக்கு அதிக சக்தியைக் கொடுக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அதனால் நாம் சொற்களாலும், செயல்களாலும், கலையாலும் தீமையை நன்மையின் மூலம் மாற்ற முடியும்.’’
’’நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள் குறித்து அதிக விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளதா?’’
'’ஆம், மிகவும் உண்மை. மேலும், சில படங்கள் தவறான நோக்கத்துடனேயே உருவாக்கப்படுகின்றன. அந்தப் படங்களைத் தவிர்க்க முயல்கிறேன்’’
ரஹ்மானின் ஒவ்வொரு வார்த்தையிலும், எவ்வளவு பக்குவம், எப்படியான ஒரு நேர்மறைச் சிந்தனை வெளிப்பட்டுள்ளது என்பதை இதை வாசிக்கும் யாருமே உணர முடியும்.
ஆனால், ரஹ்மானின் பேட்டியைக் கொண்டு, அவருக்கு எதிர்கருத்து கூறுவதன் மூலம் தங்களுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள நினைக்கும் சில பிரபலங்கள் பேசுவதன் மூலம் தங்களை தான் வெளிப்படுத்திக் கொண்டார்களே தவிர, அவர்களால் ரஹ்மானை ஒரு போதும் தாழ்த்திவிட முடியாது.
ரஹ்மான் உலகப் பிரசித்தி பெற்ற இசை அமைப்பாளர். நவீன இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாகிக் போனவர்.
ஆனால், அவர் இன்று உலகம் முழுக்க விழுதுகள் பரப்பிய விருட்சம் என்றாலும், தான் தமிழ் மண்ணில் விளைந்த ஒரு இசைப் பயிரே என்பதை என்றுமே மறக்காததே அவரை நமக்கு நெருக்கமாக்குகிறது.
- சாவித்திரி கண்ணன்
தொடர்புடைய செய்திகள்
January 12, 2026, 3:10 pm
என் படத்திற்கு சென்சார் போர்ட் 48 கட்டுகள் கொடுத்தது: மனம் திறந்த நடிகர் ஜீவா
January 7, 2026, 11:32 pm
மலேசியாவில் ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு
January 7, 2026, 10:29 pm
‘ஜனநாயகன்’ வெளியீட்டில் சிக்கல்: தணிக்கை வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பு எப்போது?
January 2, 2026, 5:10 pm
சிவ கார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படத்துக்கு தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்
January 2, 2026, 3:27 pm
தெலுங்குப் படத்துக்கு மட்டும் புரமோஷன் செய்யும் நயன்தாரா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
December 31, 2025, 11:48 am
இயக்குனர் அமீர் பருத்தி வீரனில் அறிமுகப்படுத்திய நாட்டுப்புற பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
December 30, 2025, 10:53 am
இயக்குநர் இமயம் பாரதிராஜா நலமாக உள்ளார்: குடும்பத்தினர் தகவல்
December 28, 2025, 10:18 pm
