நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மலேசியாவில் ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு

கோலாலம்பூர்:

மலேசியாவில் தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்டப்படி ஜனவரி 9ஆம் தேதி வெளியிடப்படாது. 

வேறொரு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தளபதி விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்படவிருந்தது.

தளபதியின் கடைசி திரைப்படம் என்பதால் அதன் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது.

இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் வழக்கில் ஜனவரி 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.

இதனால் இத்திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதன் அடிப்படையில் மலேசியாவில் இத்திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியிடப்படாது.

வேறொரு தேதி பின்னர் அறிவிக்கப்படும். 

மேலும் இவ்விவகாரம் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். 

நம்பிக்கையுடன் காத்திருப்போம். உங்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி என்று மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset