நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாளை அம்பாங் பார்க்கில் எந்தக் கூட்டத்திற்கும் அனுமதி இல்லை; தடை விதிக்கப்படுகிறது: போலிஸ்

கோலாலம்பூர்:

பாதுகாப்பு காரணங்களுக்காகவும், 47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டுடன் இணைந்து நாட்டின் தோற்றத்தைப் பாதுகாப்பதற்காகவும், நாளை அம்பாங்க் பார்க் பகுதியில் எந்தக் கூட்டங்களும் நடத்தப்படக்கூடாது.

உளவுத்துறை, பிற பாதுகாப்பு நிறுவனங்களின் பகுப்பாய்வின் அடிப்படையில், அந்தப் பகுதி கூட்டத்திற்குப் பொருத்தமற்றது என்று மதிப்பிட்ட பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் போலிஸ் தலைவர் ஃபாடில் மார்சஸ் இதனை தெரிவித்தார்.

ஆசியான் உச்ச நிலை மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கான நெறிமுறை பாதை, அதிகாரப்பூர்வ தங்குமிடப் பகுதியிலிருந்து 50 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருப்பதால், அம்பாங் பூங்கா சிவப்பு மண்டலப் பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் இன்டர்காண்டினென்டல் ஹோட்டலும் அடங்கும்.

பாதுகாப்பு காரணங்கள், நாட்டின் பிம்பம்,  சர்வதேச மாநாட்டின் சுமூகமான நடத்தை காரணமாக, காவல்துறையினர் அந்தப் பகுதியில் எந்தக் கூட்டத்தையும் அனுமதிக்க மாட்டார்கள்.

இன்று கோலாலம்பூர் போலிஸ் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset