நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரேசில், தென்னாப்பிரிக்க அதிபர்களை பிரதமர் இன்று சந்திக்கிறார்

புத்ராஜெயா:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோரை சந்திக்கிறார்.

இரண்டு முக்கியமான தலைவர்களும் அதிகாரப்பூர்வ வருகையாக மலேசியாவுக்கு வந்துள்ளனர்.

இந்த இரண்டு உயர்மட்ட வருகைகளும் ஆசியான் உச்சி மாநாடு, தொடர்புடைய உச்சநிலை மாநாடுகளின் தொடருக்கான முன்னோட்டமாகும்.

இதனால் தென் அமெரிக்க வட்டாத்திலும் ஆப்பிரிக்க கண்டத்திலும் மலேசியாவின் வெளி உறவுகளை வலுப்படுத்துகிறது.

லுலா டா சில்வாவின் அதிகாரப்பூர்வ வருகை மலேசியாவிற்கும் பிரேசிலுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.

2023இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு மலேசியாவிற்கு அவர் மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ பயணம் இது.

பொருளாதார நீதி,  உலகளாவிய செழிப்புக்காகப் போராடுவதில் இரு நாடுகளின் அர்ப்பணிப்பையும் இது பிரதிபலிக்கிறது என்று பிரதமரின் மூத்த பத்திரிகை செயலாளர் துங்கு நஷ்ருல் அபைதா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset