நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் உட்பட 8 பேர் மீட்கப்பட்டனர்

அலோர்ஸ்டார்:

வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் உட்பட 8 பேர்  பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

கெடா தீயணைப்பு மீட்புத் துறை ஜித்ராவுக்கு அருகிலுள்ள கம்போங் வாங் பெராவில் வெள்ளம் ஏற்பட்டது.

இந்த வெள்ளம் காரணமாக அருகில் உள்ள ஒரு கிராமத்தில் சிக்கிய ஒரு சிறுவன் உட்பட எட்டு பேரை நேற்று இரவு மீட்டது.

கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையம் ஓர் அறிக்கையில்,

வெள்ளம் காரணமாக எட்டு பேர் கொண்ட ஒரு குடும்பம் குக்கிராமப் பகுதியில் சிக்கியுள்ளதாக அவசர அழைப்பு வந்தது. 

உடனே புக்கிட் காயூ ஈத்தாம் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் பணியாளர்கள் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

அருகிலுள்ள ஆற்றில் இருந்து நீர் மட்டம் பெருக்கெடுத்து ஓடியதால், பாதிக்கப்பட்ட அனைவரும் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.

தீயணைப்புத் துறையினர் இயந்திரங்களுடன் அந்தப் பகுதியை அணுகுவதில் சிரமத்தை எதிர்கொண்டனர்.

இருப்பினும் நான்கு ஆண்கள், மூன்று பெண்கள்,  10 முதல் 12 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்  என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset