நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிகமான பொய் மோசடிகள்: டோனி பெர்னாண்டஸ் சமூக ஊடகங்களை மூடினார்

சிப்பாங்:

தொடர்ச்சியான போலி செய்திகள் மீதான விரக்தியைக் காரணம் காட்டி ஏர் ஆசியா நிறுவனர் டோனி பெர்னாண்டஸ் தனது சமூக ஊடகக் கணக்குகளை மூட முடிவு செய்துள்ளார்.

நேற்று ஒரு பேஸ்புக் பதிவில், கேபிடல் ஏ தலைமை நிர்வாக அதிகாரி தனது த்ரெட்ஸ் கணக்கை மூடிவிட்டதாகவும், 
இன்று மாலையில் தனது பேஸ்புக் கணக்கை மூடுவதாகவும், அதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் கணக்கையும் மூடுவதாகவும் அவர் கூறினார்.

நான் சமூக ஊடகங்களை விரும்புகிறேன். அது எனக்கு ஒரு சிறந்த தளமாக இருந்து வருகிறது.

ஆனால் நான் பல போலி மோசடிகளுக்கு ஆளாகியுள்ளேன்.

உண்மையில் மெட்டாவால் இதையெல்லாம் நிறுத்த முடியும் என்று அவர் மூன்று தளங்களையும் வைத்திருக்கும் முதன்மை நிறுவனத்தைக் குறிப்பிட்டு கூறினார்.

மெட்டா தளத்தில் போலி செய்திகள் அளவுக்கதிகமாக பரவியதால் தான் ஏமாற்றமடைந்ததாக பெர்னாண்டஸ் கூறினார்.

ஆசியாவின் சில பகுதிகளில் மோசடி பற்றி நாங்கள் பேசுகிறோம்.

ஆனால் அவர்களிடம் உள்ள மிகப்பெரிய அளவிலான தொழில்நுட்பத்தால் அதைத் தடுக்க முடியும்.

தனது கணக்கு மூடப்பட்டதற்கும் எதிர்மறையான கருத்துகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

மாறாக சமூக ஊடகங்கள் சிறப்பாகச் செயல்பட தன்னைத் தூண்டியது என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset