நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சிறந்த வெற்றியைப் பெறும்: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

சபா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி நிச்சயம் சிறந்த வெற்றியை பெறும்.

கெஅடிலான் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளுடன் தொடர்ந்து நல்ல உறவை கொண்டுள்ளன.

இதனால் வரவிருக்கும் சபா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி நல்ல செயல்திறன் பெறும் என்று நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்த முறை என்று நம்பிக்கை கூட்டணி நல்ல செயல்திறனைக் காண்பிக்கும் என்று நான் நம்புகிறேன்.

ஏனென்றால் நாங்கள் பெரும்பாலான கட்சிகளுடன் நண்பர்களாக இருக்கிறோம்.

நாங்கள் தொடர்ந்து களத்தில் எங்களால் முடிந்ததைச் செய்வோம் என்று அவர் கூறினார்.

குறுகிய கால பயணமாக சபாவிற்கு சென்றிந்தேன்.

இந்த பயணம் தேர்தலுக்கு முந்தைய 
தயார் நிலைகளை மதிப்பிடும் வகையில் அமைந்திருந்தது.

மேலும் நம்பிக்கை கூட்டணியின் கிளைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டது.

தொழில்முனைவோர் மேம்பாடு  கூட்டுறவு துணையமைச்சருமான டத்தோஸ்ரீ ரமணன் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset