நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இவோன் பெனடிக்கின் ராஜினாமா கடிதத்தை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: பிரதமர்

புத்ராஜெயா:

தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான எந்தவொரு கடிதத்தையும் டத்தோ இவோன் பெனடிக்கிடமிருந்து அமைச்சரவை இன்னும் பெறவில்லை.

இன்று காலை கூட அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

பெனாம்பாங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அவர் இன்னும் அமைச்சராக உள்ளார். அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இன்றைய வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

சபாவின் அரசியலமைப்பு உரிமைகளை கூட்டரசு வருவாயில் 40 சதவீதத்திற்கு அங்கீகரித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சட்டத்துறை தலைவர் அலுவலகம் மேல்முறையீடு செய்தால்,

அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்ய இவோனின் நோக்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக அன்வார் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset