நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசியான் உச்சநிலை மாநாடு: பாதுகாப்பை வலுப்படுத்தி விழிப்புநிலையில் மலேசிய காவல்துறை

கோலாலம்பூர்:

கோலாலம்பூரில் ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்கு முன்னதாக நகரத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அங்குப் பல பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்.

கோலாலம்பூர் மாநாட்டு நிலையத்தைச் சுற்றிய முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தடுப்புகளைப் போட்டுள்ளனர்.

சோதனைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

3 நாள் உச்சநிலை மாநாடு இன்று தொடங்கவிருக்கிறது.

ஆசியானின் பத்து உறுப்பு நாடுகளுடன் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உரையாடல் பங்காளி நாடுகளும் மாநாட்டில் கலந்துகொள்கின்றன.

உலகத் தலைவர்களும் ஆசியான் நாடுகளின் தலைவர்களும் கோலாலம்பூர் வந்தடைந்துள்ளனர். பன்னாட்டு ராஜதந்திரிகள், வெளிவிவகாரத்துறை அமைச்சர்களும் வந்து சேர்ந்துள்ளனர். 

தென்சீனக் கடல் விவகாரம், மியன்மார் நெருக்கடி, பொருளாதார ஒருங்கிணைப்பு, உலக வர்த்தகச் சூழல் ஆகிய முக்கிய வட்டார விவகாரங்களுக்கு இடையே மாநாடு நடைபெறுகிறது.

டிரம்ப் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு எதிர்ப்பு பேரணி நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

மாநாடு நடைபெறும நாட்களில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலிசார் முழு விழிப்புநிலையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset