நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெடாவில் 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன

அலோர் ஸ்டார்:

நேற்று நீடித்த கனமழையைத் தொடர்ந்து, மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் குறைந்தது 15 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை பாதிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்கள் பண்டார் பாரு, கூலிம், பாலிங், சிக், பெண்டாங் ஆகும்.

நான்கு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழைக்கு பிறகு நேற்று மாலை 7 மணியளவில் வெள்ளம் ஏற்பட்டதாக பண்டார் பாரு மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு செயலகத்தின் இயக்குநர் அப்துல் ரஹீம் கைருதீன் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட கிராமங்களில் கம்போங் டெராப் தலாம், கம்போங் சுங்கை தெங்காஸ், கம்போங் சுங்கை பூண்டி, கம்போங் பத்து 16 லோம்போங் ஏ, கம்போங் செரோக் ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset