செய்திகள் மலேசியா
ரபிஸியின் மகன் தாக்குதல் வழக்கு தொடர்பான ரசாயன அறிக்கையை போலிஸ் இன்னும் பெறவில்லை: ஐஜிபி
கோலாலம்பூர்:
ரபிஸி ரம்லியின் மகன் தாக்குதல் வழக்கு தொடர்பான ரசாயன அறிக்கையை போலிஸ் இன்னும் பெறவில்லை.
தேசிய போலிஸ்படைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் காலித் இஸ்மாயில் இதனை கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 13 அன்று முன்னாள் பொருளாதார அமைச்சர் ரபிஸி ராம்லியின் மகன் மீதான தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் செலுத்தப்பட்ட திரவம் தொடர்பான ரசாயன அறிக்கையை போலிசார் இன்னும் பெறவில்லை. இதனால் இதுவரை, அது இன்னும் வெளியிடப்படவில்லை.
இதைத் தொடர்ந்து முன்னேற்றங்கள் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
புக்கிட் அமானில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
புத்ராஜெயாவில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலின் வாகன நிறுத்துமிடத்தில் கருப்பு உடை அணிந்த இரண்டு பேர் ரபிஸியின் மகனைத் தாக்கியதில் அவர் மீது திரவம் செலுத்தப்பட்டது குறித்த ரசாயன அறிக்கை போலிசாருக்குக் கிடைத்ததா என்று கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 24, 2025, 10:57 pm
இவோன் பெனடிக்கின் ராஜினாமா கடிதத்தை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: பிரதமர்
October 24, 2025, 10:55 pm
முன்னாள் 1 எம்டிபி தலைமை நிர்வாக அதிகாரி ஜோ லோவின் வழிமுறைகளைப் பின்பற்றினார்: தற்காப்பு தரப்பு
October 24, 2025, 10:52 pm
ஜூருவில் நடந்த தாய், மகள் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டவர் உட்பட 3 வெளிநாட்டினர் கைது
October 24, 2025, 5:53 pm
தலைநகரில் டிரம்ப் வருகையை எதிர்த்து பாஸ் இளைஞர் அணி பேரணி
October 24, 2025, 5:18 pm
பள்ளிகளில் மது; அமைச்சரவை ஏற்கெனவே உள்ள வழிகாட்டுதல்களை நிலை நிறுத்துகிறது: ஃபஹ்மி
October 24, 2025, 5:10 pm
மொஹைதின் மருமகனின் வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்படவில்லை: எம்ஏசிசி
October 24, 2025, 3:44 pm
