செய்திகள் மலேசியா
கெடாவில் சூராவ், பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி சப்தத்திற்கான புதிய விதிமுறைகளை மஇகா வரவேற்கிறது: டத்தோ ராமலிங்கம்
கோலாலம்பூர்:
கெடாவில் சூராவ், பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி சப்தத்திற்கான புதிய விதிமுறைகளை மஇகா வரவேற்கிறது.
மஇகா தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஏகே ராமலிங்கம் இதனை கூறினார்.
கெடா மாநில இஸ்லாமிய மத விவகாரத் துறையின் பள்ளிவாசல், சூராவ் மேலாண்மை பிரிவு புதிய வழிக்காட்டலை வெளியிட்டுள்ளது.
அதாவது மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்கள், சூராவ்களில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதலை அப் பிரிவு வெளியிட்டுள்ளது.
சட்ட விதிமுறைகள், சமூகத் தேவைகளுக்கு இணங்க பள்ளிவாசல்கள், சூராவ் ஒலிபெருக்கிகளின் சத்தத்ததை, அதன் பயன்பாட்டை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இது சுற்றியுள்ள குடியிருப்பாளர்களுக்கு தொந்தரவு ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளது.
மேலும் இஸ்லாமிய போதனைகள் ஞானத்துடன் தெரிவிக்கப்பட வேண்டும்.
மேலும் சுற்றியுள்ள சமூகத்திற்கு இடையூறு விளைவிக்கக் கூடாது.
ஒலி அளவுகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நேரம், இடத்திற்கு ஏற்ப அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருக்கக்கூடாது.
வெளிப்புற ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது தொழுகைக்கான அழைப்பு போன்ற முதன்மை மத நோக்கங்களுக்காக மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
பொது சொற்பொழிவுகளுக்கு அல்ல என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதும்
வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
கெடா மாநில இஸ்லாமிய மத விவகாரத் துறையின் பள்ளிவாசல், சூராவ் மேலாண்மை பிரிவின் இந்த வழிகாட்டுதல்களை மஇகா முழுமையாக மதிக்கிறது.
அதே வேளையில் மாநிலத்தில் வாழும் மற்ற இன மக்களையும் கருத்தில் கொண்டு இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மற்ற இன மக்களின் உரிமையையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மஇகா கருதுகிறது.
ஆக பல்லின மக்களை கொண்டுள்ள மலேசியாவின் அனைவரும் அடுத்தவரின் இனம், மதம், கலை, கலாச்சாரத்திற்கு உரிய மதிப்புகளை வழங்க வேண்டும்.
இவ்வேளையில் கெடா மாநில அரசுக்கும் கெடா மாநில இஸ்லாமிய மத விவகாரத் துறையின் பள்ளிவாசல், சூராவ் மேலாண்மை பிரிவுக்கும் மஇகா நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது என்று டத்தோ ராமலிங்கம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 24, 2025, 10:57 pm
இவோன் பெனடிக்கின் ராஜினாமா கடிதத்தை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: பிரதமர்
October 24, 2025, 10:55 pm
முன்னாள் 1 எம்டிபி தலைமை நிர்வாக அதிகாரி ஜோ லோவின் வழிமுறைகளைப் பின்பற்றினார்: தற்காப்பு தரப்பு
October 24, 2025, 10:52 pm
ஜூருவில் நடந்த தாய், மகள் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டவர் உட்பட 3 வெளிநாட்டினர் கைது
October 24, 2025, 5:53 pm
தலைநகரில் டிரம்ப் வருகையை எதிர்த்து பாஸ் இளைஞர் அணி பேரணி
October 24, 2025, 5:29 pm
ரபிஸியின் மகன் தாக்குதல் வழக்கு தொடர்பான ரசாயன அறிக்கையை போலிஸ் இன்னும் பெறவில்லை: ஐஜிபி
October 24, 2025, 5:18 pm
பள்ளிகளில் மது; அமைச்சரவை ஏற்கெனவே உள்ள வழிகாட்டுதல்களை நிலை நிறுத்துகிறது: ஃபஹ்மி
October 24, 2025, 5:10 pm
மொஹைதின் மருமகனின் வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்படவில்லை: எம்ஏசிசி
October 24, 2025, 3:44 pm
