நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிகளில் மது; அமைச்சரவை ஏற்கெனவே உள்ள வழிகாட்டுதல்களை நிலை நிறுத்துகிறது: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

சீனப் பள்ளி மண்டபங்களில் மதுபானங்களை வழங்குவது தொடர்பான தற்போதைய விதிமுறைகள், வழிகாட்டுதல்களை நிலை நிறுத்த அமைச்சரவை இன்று முடிவு செய்தது.

இதன் அர்த்தம், சீனப் பள்ளிகளில் மாணவர்களை ஈடுபடுத்தாத நிகழ்வுகளுக்காக மண்டபங்களை பொதுமக்களுக்கு வாடகைக்கு விடப்படும் போது மதுபானங்கள் தொடர்ந்து வழங்கப்படலாம்.

இன்று மாலை புத்ராஜெயாவில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின் போது அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபஹ்மி ஃபட்சில் இந்த முடிவை அறிவித்தார்.

முதலில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பள்ளிகளின் பிரச்சினை, மதுபானங்களை வழங்கும் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தற்போதுள்ள வழிகாட்டுதல்கள், நடைமுறைகள் பொருந்தும்.

தற்போதுள்ள வழிகாட்டுதல்களில் எந்த மாற்றங்களும் இல்லை என்று அமைச்சரவைக்கு நினைவூட்டப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது

இந்த விஷயத்தை இன்னும் தெளிவுபடுத்த கல்வியமைச்சு ஒரு தொடர் அறிக்கையை வெளியிடும் என்று ஃபஹ்மி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset