நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தலைநகரில் டிரம்ப் வருகையை எதிர்த்து பாஸ் இளைஞர் அணி பேரணி

கோலாலம்பூர்:

ஆசியான் உச்ச நிலைமாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மலேசியாவுக்கு வருகிறார்.

அவரின் வருகையை எதிர்த்து சுமார் 700 பங்கேற்பாளர்கள் அமெரிக்க தூதரகம் முன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலஸ்தீனத்தில் நிலவும் மோதலின் பின்னணியில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இஸ்ரேலிய ஆட்சியுடன் அமெரிக்கா கூட்டுச் சேர்ந்ததை விமர்சிக்கும் கோஷங்களை பங்கேற்பாளர்கள் எழுப்பினர்.

வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, பாஸ் இளைஞர்கள் ஏற்பாடு செய்த பேரணியில் பங்கேற்றவர்கள் மெனாரா தாபோங் ஹாஜியிலிருந்து பதாகைகளை ஏந்தி பேரணியாகச் சென்றனர்.

பாஸ் தலைவர்களைத் தவிர  பெஜுவாங் கட்சியின் தகவல் தலைவர் முகமது ரபீக் ரஷீத் அலி, சமூக ஆர்வலர் தியான் சுவா ஆகியோரும் காணப்பட்டனர்.

காசாவில் மக்கள் கொல்லப்படுவதை அவரது நாடு இன்னும் ஆதரிக்கும் அதே வேளையில், 

மலேசியாவில் அவர் வரவேற்கப்படுவதில்லை என்பதை இன்று டிரம்ப் அறிய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று பாஸ் இளைஞர் தலைவர் அப்னான் ஹமிமி தைப் அசமுடின் தூதரகத்திற்கு வெளியே பங்கேற்றவர்களுக்கு ஆற்றிய உரையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset