நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒற்றுமையின் வலிமையுடனும் உறுதியான நம்பிக்கையுடனும் சபா தேர்தலை எதிர்கொள்ள கெஅடிலான் தயாராக உள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்

கோத்தா கினபாலு:

ஒற்றுமையின் வலிமையுடனும் உறுதியான நம்பிக்கையுடனும் சபா தேர்தலை எதிர்கொள்ள கெஅடிலான் தயாராக உள்ளது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சரும் கெஅடிலான் உதவித் தலைவருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

சபாவில் விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக பணிகளை வலுப்படுத்த ஒரு தளமாக சபா மாநில கெஅடிலான் தலைவர்களுடனான கூட்டத்தை நடத்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்தக் கூட்டம் கட்சியின் போராட்டத்திற்கான கவனம், தோழமை, உயர் அர்ப்பணிப்பு நிறைந்த சூழலில் நடந்தது.

கெஅடிலான் போராட்டத்தின் செய்தி சபாவின் அனைத்து மூலைகளிலும் உள்ள மக்களை தொடர்ந்து சென்றடைவதை உறுதி செய்வதற்காக, தேர்தல் கேந்திரத்தின் தயார் நிலை, அடிமட்ட வலிமை, தகவல் தொடர்பு உத்திகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் குறித்து ஆராயப்பட்டது.
கிளைத் தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் முன்வைத்த ஒவ்வொரு  பரிந்துரைகளையும் நான் கவனமாகக் கேட்டேன்.

பகிரப்பட்ட ஒவ்வொரு பரிந்துரைகளும் செயல்படுத்தலை வலுப்படுத்த மிகவும் மதிப்புமிக்கது.

சபா மாநில கெஅடிலான் தலைமைத்துவ தலைமைத்துவத்தின் ஒத்துழைப்பு, ஒருபோதும் மங்காத போராட்ட மனப்பான்மைக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் சபா வெறும் போட்டிக்கான களம் மட்டுமல்ல. அது மக்களுக்கான போராட்டக் களம் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset