செய்திகள் மலேசியா
ஜூருவில் நடந்த தாய், மகள் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டவர் உட்பட 3 வெளிநாட்டினர் கைது
ஜூரு:
ஜூருவில் நடந்த தாய், மகள் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டவர் உட்பட 3 வெளிநாட்டினரை போலிசார் கைது செய்தனர்.
பினாங்கு மாநில போலிஸ் தலைவர் டத்தோ அஸிசி இஸ்மாயில் இதனை கூறினார்.
கடந்த சனிக்கிழமை இங்குள்ள கம்போங் செகோலா ஜூருவில் உள்ள ஒரு வீட்டில் தனது மகளுடன் பெண் ஒருவர் இறந்து கிடந்தார்.
சம்பந்தப்பட்ட கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு உதவ மூன்று வெளிநாட்டு ஆண்களை போலிசார் கைது செய்துள்ளனர்.
அம்மூவரும் இன்று தனித் தனியாக கைது செய்யப்பட்டனர்.
கூலிம், கெடாவில் இரண்டு ஆண்களும், சிலாங்கூரில் மற்றொருவரும் தப்பிக்க முயன்ற போதும் கைது செய்யப்பட்டனர்.
30 முதல் 40 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள்.
மேலும் அனைத்து சந்தேக நபர்களுக்கும் தடுப்புக்காவல் உத்தரவைப் பெறுவதற்காக போலிசார் நாளை அவர்களை புக்கிட் மெர்தாஜாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வார்கள்.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 24, 2025, 10:57 pm
இவோன் பெனடிக்கின் ராஜினாமா கடிதத்தை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: பிரதமர்
October 24, 2025, 10:55 pm
முன்னாள் 1 எம்டிபி தலைமை நிர்வாக அதிகாரி ஜோ லோவின் வழிமுறைகளைப் பின்பற்றினார்: தற்காப்பு தரப்பு
October 24, 2025, 5:53 pm
தலைநகரில் டிரம்ப் வருகையை எதிர்த்து பாஸ் இளைஞர் அணி பேரணி
October 24, 2025, 5:29 pm
ரபிஸியின் மகன் தாக்குதல் வழக்கு தொடர்பான ரசாயன அறிக்கையை போலிஸ் இன்னும் பெறவில்லை: ஐஜிபி
October 24, 2025, 5:18 pm
பள்ளிகளில் மது; அமைச்சரவை ஏற்கெனவே உள்ள வழிகாட்டுதல்களை நிலை நிறுத்துகிறது: ஃபஹ்மி
October 24, 2025, 5:10 pm
மொஹைதின் மருமகனின் வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்படவில்லை: எம்ஏசிசி
October 24, 2025, 3:44 pm
