நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மொஹைதின் மருமகனின் வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்படவில்லை: எம்ஏசிசி

புத்ராஜெயா:

மொஹைதின் மருமகனின் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் இன்னும் முடக்கப்படவில்லை.

தப்பியோடிய தொழிலதிபர் டத்தோஸ்ரீ முஹம்மத் அட்லான் பெர்ஹானிடம், வெளிநாடுகளில் முடக்கப்படாத சொத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசினின் மருமகன், தனது வெளிநாட்டு வாழ்க்கையை நடத்துவதற்காக இந்த சொத்துக்களைப் பயன்படுத்தியிருக்கலாம்.

இருப்பினும், சேமித்து வைக்கப்பட்டுள்ள சொத்துக்களின் அளவு, இருப்பிடத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் எம்ஏசிசி துணைத் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அஹமது குசாய்ரி யாஹ்யா,

முஹம்மத் அட்லானின் வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

ஆனால் முஹம்மத் அட்லானுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் விசாரணை தொடர்பாக மலேசியாவில் அவருக்குச் சொந்தமான கணக்குகள் உட்பட அனைத்து சொத்துக்களும் எம்ஏசிசியால் முடக்கப்பட்டுள்ளன  என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset