நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஸ்பிஎம் தேர்வுக்கு முன்னதாக எந்தவொரு பேரிடர்களையும் எதிர்கொள்ள கல்வியமைச்சு தயார்

புத்ராஜெயா -

எஸ்பிஎம் தேர்வுக்கு முன்னதாக எந்தவொரு பேரிடர்களையும் எதிர்கொள்ள கல்வியமைச்சு தயாராக உள்ளது.

2025 எஸபிஎம் தேர்வுக்கு முன்னதாக, குறிப்பாக வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள வேண்டும்.

அதே வேளையில் மாணவர்கள், தேர்வு ஊழியர்களின் பாதுகாப்பு, நலன் குறித்து கல்வியமைச்சு உறுதியளித்துள்ளது.

எஸ்பிஎம் தேர்வின் சுமூகமான நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

இதற்காக நட்மா, மெட் மலேசியா, சுகாதார அமைச்சு, போலிஸ்படை, ஆயுதப்படை  மலேசிய தீயணைப்பு,  மீட்புத் துறை, மலேசிய பொது பாதுகாப்புத் துறை  உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களுடன் எப்போதும் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வியமைச்சு எப்போதும் தயார் நிலையில் உள்ளது.

மேலும் எஸ்பிஎம் தேர்வு சீராகவும் ஒழுங்காகவும் தொடர முடியும் என்பதை உறுதி செய்வதற்காக பொருத்தமான ஆயத்த நடவடிக்கைகள், நிலையான இயக்க நடைமுறைகளுக்கு உறுதிபூண்டுள்ளது என்று கல்வியமைச்சு ஓர் அறிக்கையில் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset