நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாடு மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் தாயின் கைகளில் இருந்த 11 மாதக் குழந்தை உயிரிழந்தது 

பெரா:

கார் ஒன்று மாடு மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் தாயின் கைகளில் இருந்த 11 மாதக் குழந்தை இறந்தது.

இந்த சம்பவம் நேற்று இரவு ஜாலான் கெராயோங்–சிம்பாங் கெபாயாங்கின் கிலோமீட்டர் 49 இல் நிகழ்ந்தது.

குடும்பத்தினர் பயணித்த கார் மாடுகள் கூட்டத்தின் மீது மோதியதில் சாலையில் இருந்து விலகிச் சென்றதில் கையில் இருந்த குழந்தை தூக்கி வீசப்பட்டது. 

இரவு 9.40 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நூர் அட்ரியானா அமிரா முஹம்மது நோரிஸ்மெயில், தலையில் ஏற்பட்ட காயங்களால் கிளினிக் பண்டார் 32இல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.

பெரோடுவா பெஸ்ஸா காரை பாதிக்கப்பட்டவரின் தந்தை முஹம்மது நோரிஸ்மெயில் சானி (22), அவரது மனைவி நிக் நூர் ஐனி அசிரா சே அசேமன் (21) ஆகியோர் தங்கள் குழந்தைக்கு பால் வாங்குவதற்காக கெபயாங்கிலிருந்து கெராயோங்கிற்குச் செல்லும் வழியில் ஓட்டிச் சென்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​திடீரென சாலையின் இடது புறத்தில் இருந்து மாடுகள் கூட்டமாக வெளியே வந்தது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்து மாட்டை மோதிய கார் விபத்துக்குள்ளானது என்று பெரா மாவட்ட போலிஸ் தலைவர் சூல்கிஃப்லி நசீர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset