நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இதுதான் என் வாழ்வில் கடைசி விமானப் பயணமாக இருக்கும் என நினைத்தேன்: நடுவானில் தடுமாறிய விமானத்திலிருந்த பயணியின் பதிவு

கோலாலம்பூர்:

இதுதான் என்னுடைய கடைசி விமானப் பயணமாக இருக்கும் என நினைத்தேன்.

அப்துல் ஜலில் என்ற பயணி தனது முகநூலில் இவ்வாறு பதிவேற்றம் செய்துள்ளார்.

விமானத்தில் பயணித்த அவர் தாங்கள் பயணித்த விமானத்தில் திடீரென காற்றழுத்தம் குறைந்ததால்,விமானம் சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்தது போல் பயணிகள் உணர்ந்த ஒரு பயங்கரமான தருணத்தைப் பகிர்ந்து கொண்டார்.

சம்பவம் நடந்த நாளில், அவர் கேஎல்ஐஏ முனையம் 1 இலிருந்து சரவாக்கின் பிந்துலுவுக்கு காலை 8.20 மணிக்கு ஒரு விமானத்தில் இருந்ததாக அவர் கூறினார்.

விமான நிலையத்திலும் விமானப் பயணத்திலும் எல்லாம் சீராக நடந்து கொண்டிருந்தது.

இருப்பினும், காலை 10 மணியளவில் விமானம், கட்டுப்பாட்டை இழப்பது போல் தோன்றுவதற்கு முன்பு சில விசித்திரமான சத்தங்கள் கேட்டன. மேலும் எங்களுக்கு ஆக்ஸிஜன் முகமூடி அணிய உத்தரவிட்டார். அவசரமாக பணிப்பெண்கள் பயணிகளுக்கு உதவத்தொடங்கினார்கள்.

இதைத் தொடர்ந்து கேப்டன் அவசரநிலையை அறிவித்தபோது, ​​ஏதோ தவறு இருப்பதாக நான் உறுதியாக நம்பினேன்.

நாம் ஒவ்வொரு முறை விமானத்தில் ஏறும் போதும், அவசரகால உபகரணங்களைப் பயன்படுத்துவது குறித்து விமானப் பணிப்பெண் விளக்கமளிக்கிறார். ஆனால் அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. 

மேலும் சம்பவம் நடந்த நேரத்தில் விமானப் பயணிகள் இடையே  மிகவும் குழப்பமான சூழ்நிலை நிலவியது என்று அவர் கூறினார்.

இருப்பினும், விமானி விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பெரு முயற்சி எடுத்தார். 10,000 அடி உயரத்தில் பறப்பதாக அவர் அறிவித்த பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இது முழு கேபின் அழுத்தம் இல்லாத விமானங்களுக்கு பாதுகாப்பான நிலையாகும்.

அப்போதுதான் எனக்கு கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. 

விமானப் பணியாளர்கள் விமானப் பாதையில் நடக்கத்  தொடங்கியபோது, ​​பாதுகாப்பு குறித்த எங்கள் நம்பிக்கை மீண்டும் ஏற்பட்டது.

பின்னர் விமானி, திட்டமிட்டபடி காலை 10.35 மணிக்கு பிந்துலு விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் என்று அறிவித்தார். இறைவனுக்கு நன்றி செலுத்தியபடி விமானிக்கும் நன்றி கூறி விமானத்திலிருந்து வெளியேறினோம் என்று முகநூலில் பயணி அப்துல் ஜலில் பதிவிட்டுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset