நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா வெள்ளத்தால் 2,100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு: தைப்பிங் R & R மூடப்பட்டது

தைப்பிங்:

பேராக் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,100க்கும் மேற்பட்டோர் இன்னும் வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி மஞ்சோங், லாருட், மாத்தாங் செலாமா ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால் அங்கு உள்ள தற்காலிக  வெள்ள நிவாரண மையங்களில் 759 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 2,171 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மஞ்சோங் மாவட்டத்தில் மூன்று மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

லாருட், மாத்தாங் செலாமா மாவட்டங்களில் 19 நிவாரண மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது.

இதனிடையே  வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் உள்ள தைப்பிங் வடக்கு நோக்கிய ஓய்வு , பராமரிப்பு (R&R) பகுதி, தொடர் மழை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

இதனால் அப்பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

அனைத்து நெடுஞ்சாலை பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மூடல் அவசியம் என்று பிளஸ் நிறுவனம் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset